அடிதூள்.. ரூ.7,500 போதும்.. 10GB ரேம், 90Hz Eye Comfort டிஸ்பிளே, IP54 ரேட்டிங், 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
4ஜிபி வழக்கமான ரேம் மற்றும் 6ஜிபி விர்ச்சுவல் ரேம் என மொத்தம் 10ஜிபி ரேம், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான ஐ கம்ஃபோர்ட் டிஸ்பிளே, நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங், 5000எம்ஏஎச் பேட்டரி உட்பட பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ள ஒரு ரியல்மி ஸ்மார்ட்போன் தற்போது வெறும் ரூ.8500 க்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கிறது.
அது ரியல்மி நார்சோ என்61 (Realme NARZO N61) ஸ்மார்ட்போனாகும். அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜி ரேம் ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 17% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.8,999-க்கு பதிலாக ரூ.7,498-க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 23% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.10,999-க்கு பதிலாக ரூ.8,498-க்கு வாங்க கிடைக்கிறது.

அமேசான் இந்தியா வலைத்தளத்தில், ரியல்மி நார்சோ ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் மற்ற முக்கியமான சலுகைகளை பொறுத்தவரை ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி (Realme Narzo 70 Turbo 5G) ரூ.19,999 க்கு பதிலாக ரூ.16999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme NARZO 70 Pro 5G) ரூ.24,999 க்கு பதிலாக ரூ.15,498 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ரியல்மி நார்சோ என்65 5ஜி (Realme Narzo N65 5G) ச்னர்ட்போன் ஆனது ரூ.14,999 க்கு பதிலாக ரூ.12,498 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ரியல்மி நார்சோ என்63 (Realme NARZO N63) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9,999 க்கு பதிலாக ரூ.8,498 க்கு அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி நார்சோ என்61 ஸ்மார்ட்போனை நம்பை வாங்கலாமா? இது மிகவும் ஸ்ட்ராங் அன்ட் ஸ்டைல் ஆன டிசைனை கொண்டுள்ளது. இது இன்டெக்ரேடட் மெட்டாலிக் ஃபிரேம் (Integrated metallic frame), வலுவூட்டப்பட்ட கிளாஸ் (Reinforced glass), தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 dust and water-resistant rating), 7.8மிமீ ஸ்லிம் பாடியை (7.8mm Slim body) கொண்டுள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ என்61 ஸ்மார்ட்போன் ஆனது 1600 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் 560 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (560 nits Peak Brightness) உடனான 6.74 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை (HD+ Display) கொண்டு உள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ எம்61 ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் டி612 சிப்செட் (Unisoc T612 Chipset) மூலம் இயங்குகிறது. ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக விர்ச்சுவல் ரேம் அம்சம் வழியாக மேலும் 6ஜிபி ரேம் -ஐ சேர்த்து இந்த ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 12ஜிபி ஆக அதிகரிக்க முடியும்
ஆப்ரேட்டிங் சிஸ்டமை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ என்61 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ரியல்மி யுஐ (Realme UI) உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது 32எம்பி ப்ரைமரி கேமராவை (32MP Primary Camera) கொண்டுள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய 5எம்பி செல்பீ கேமராவை (5MP Selfie Camera) கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, இது 10W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது டூயல் 4ஜி (Dual 4G), வைஃபை (Wi-Fi), ப்ளூடூத் 5.0, 3.5மிமீ ஹெட்செட் ஜாக் ஆகியவைகளை கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications