Home
Deal of the day

படுத்தே விட்டான் ஐயா.. 1 இல்ல 2 இல்ல.. தள்ளுபடி விலையில் ஐந்து Redmi 5ஜி போன்கள்.. Amazon-ல் ஆபர் மழை!

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக அமேசான் கிரேட் சம்மர் சேல் (Amazon Great Summer Sale) என்கிற சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. எப்போதும் போல ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், வீட்டு உபகரணங்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளின் கீழ் உள்ள பல தயாரிப்புகள் மீது தள்ளுபடிகள் கிடைத்தாலும், வழக்கம் போல மொபைல் போன்கள் மீதே ஆபர்கள், டிஸ்கவுண்ட்கள் ஏராளம்!

தற்போது நடைபெற்று வரும் இந்த விற்பனையில், அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பலதரப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு குறிப்பிட்ட கால விலை குறைப்புகள் (limited-period price cuts), எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் (exchange offers), கேஷ்பேக் டீல்கள் (cashback deals) மற்றும் வங்கி தள்ளுபடிகள் (bank discounts) கிடைக்கிறது.

தள்ளுபடி விலையில் ஐந்து Redmi 5ஜி போன்கள்.. Amazon-ல் ஆபர் மழை!

கூடவே பார்ட்னர்ஷிப் பேமெண்ட் சலுகைகள் மூலம் கூடுதல் சேமிப்புகளையும் முன்னிலைப்படுத்துகிறது. குறிப்பாக எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஈஸிஇஎம்ஐ பயனர்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தகுதியான வாங்குதல்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியாக மே 9 முதல் தொடங்கியுள்ள அமேசான் கிரேட் சம்மர் சேலின் போது, உங்களுடைய முழு கவனமும், ஷாவ்மீ நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமே இருந்தால்.. நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.. இந்த அமேசான் விற்பனையில் என்னென்ன ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என்கிற பட்டியல் இதோ:

ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீதான தள்ளுபடி விவரங்கள்: அமேசானில் தற்போது நடைபெற்று வரும் கிரேட் சம்மர் விற்பனையின் போது, ​​பட்ஜெட் மற்றும் பிரீமியம் மிட்-ரேஞ்ச் பிரிவுகளில் உள்ள ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதிக விலை கொண்ட மாடல்களில், ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 15 Pro Plus 5G), அதன் அசல் விலையான ரூ.39,999 க்கு பதிலாக ரூ.37,249 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்

இதேபோல், ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி (Redmi Note 15 Pro 5G) ஸ்மார்ட்போனும் குறிப்பிடத்தக்க தள்ளுபடியை பெற்றுள்ளது. இது ரூ.33,999 க்கு பதிலாக ரூ.27,499 க்கு வாங்க கிடைக்கிறது. இன்னும் விலை குறைவான ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபர்களை பொறுத்தவரை ரெட்மி நோட் 15 5ஜி (Redmi Note 15 5G) மாடலை ரூ.26,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்கலாம்.

அதே நேரத்தில் ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி பிரைம் எடிஷன் (Redmi Note 14 Pro 5G Prime Edition) ஆனது ரூ.26,999 க்கு பதிலாக ரூ.25,499 க்கு வாங்க கிடைக்கிறது. இன்னும் மலிவான என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனை தேடும் வாடிக்கையாளர்கள் ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி (Redmi A7 Pro 5G) மாடலை கருத்தில் கொள்ளலாம், இது அமேசான் விற்பனை சலுகைகளின் ஒரு பகுதியாக, அதன் பட்டியலிடப்பட்ட விலையான ரூ.15,999 கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இது 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் யூனிசாக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 32-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. மேலும் இது 15W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 6,300mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Great Summer Sale 2026 Best Redmi 5G Smartphone Deals Including Redmi Note 15 Pro Plus 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X