அமேசான் சிறப்பு விற்பனை: சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
அமேசான் வலைத்தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் சில ஸ்மார்ட்போன்களுக்கு இப்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர லேப்டாப், டேப்லெட்,ஸ்மார்ட் டிவி போன்ற சாதனங்களையும் குறைந்த விலையில் வாங்க முடியும். கண்டிப்பாக இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த அமேசான் தளத்தில் சியோமி, சாம்சங் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் இப்போது அமேசான் தளத்தில் விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்3 5ஜி
சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்3 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.95,999-ஆக உள்ளது. இப்போது அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.84,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.7-இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்பிளே வசதி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 ஆக்டோ-கோர் சிப்செட், 8ஜிபிரேம், 128ஜிபி மெமரி, 3300 எம்ஏஎச் பேட்டரி,15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்3 5ஜி மாடல். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா+ 12எம்பி வைடு கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி
சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.1,01,989-ஆக உள்ளது. மேலும் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.69,488-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் 2.9ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் 2100
ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 6.2-இன்ச் டிஸ்பிளே, 2400 X 1080 பிக்சல் தீர்மானம், 4000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி. அதேபோல் இந்த சாதனத்தின் பின்புறம் 12எம்பி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் உளள்ன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
விவோ வி21இ 5ஜி
விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.27,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.24,990-ஆக உள்ளது. மேலும் விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் ஆதரவு, மீடியாடெக் Dimensity 700 சிப்செட் ஆதரவு, 4000 எம்ஏஎச் பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.
மேலும் விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லெனஸ் கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
சாம்சங் கேலக்ஸி எம்31
சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.21,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.16,999-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் +
5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன். அதேபோல் 6.4-இன்ச் டிஸ்பிளே, எக்ஸிநோஸ் 9611 ஆக்டோ-கோர் பிராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரி,பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி
சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.38,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரூ.35,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் இந்த சாதனத்தின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, 6.5-இன்ச் டிஸ்பிளே,6ஜிபி ரேம்,128ஜிபி மெமரி, 4500 எம்ஏஎச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications