அமேசான் சிறப்பு விற்பனை: சாம்சங், ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
அமேசான் தளதத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் சியோமி, ஆப்பிள் ஐபோன், சாம்சங், விவோ, ஒப்போ, ரியல்மி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட சாதனங்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமேசான் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது விலைகுறைக்கப்பட்ட அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி நோட் 20
அமேசான் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.86,000 என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் விலைகுறைக்கப்பட்டு ரூ.44,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் FHD+ dynamic Amoled டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. தரமான எக்ஸிநோஸ் 990 எஸ்ஒசி சிப்செட் வசதி, 4300 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் மாடல்.
ரியல்மி நார்சோ 30
அமேசான் சிறப்பு விற்பனையில் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.12,499-விலையில்
வாங்க முடியும். குறிப்பாகரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் Full HD+ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 90.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 580 நிட்ஸ் பிரைட்நஸ், மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செல்பீகளுக்கும்,
வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது
ரியல்மி நார்சோ 30.
சாம்சங் கேலக்ஸி எம்51
சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்டபோனுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.23,999-ஆக உள்ளது. ஆனால் இப்போது சிறப்பு விற்பனையில் இந்த சாதனத்தை
ரூ.19,999-விலையில் வாங்க முடியும்.கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம், 60Hz refresh rate, 420 nits பிரைட்நஸ் வசதி, ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி, 7000எம்ஏஎச் பேட்டரி, 25வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ்+ 12எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 5எம்பி டெப்த் சென்சார் +
5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.குறிப்பாக 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.
சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் மாடலுக்கு அமேசான் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.12,499-விலையில் வாங்க முடியும். மேலும்
கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி, 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன். குறிப்பாக கேலக்ஸி எம்21 2021 எடிஷன்
ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன்.
ஒப்போ ஏ74 5ஜி
அமேசான் தளத்தில் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.20,990-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ஒப்போ ஏ74 5ஜி சாதனத்தை ரூ.15,990-விலையில்
வாங்க முடியும். ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080x2400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி, 5000 எம்ஏஎஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications