அமேசான் சிறப்பு விற்பனை: அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் நீங்கள் எதிர்பார்த்த ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை கம்மி விலையில் வாங்க முடியும்.
மேலும் இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி, ஒன்பிளஸ் 9 5ஜி உள்ளிட்ட சாதனங்களுக்கு அசத்தலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி
சாம்சங் கேலக்ஸ எம்32 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.23,990-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.16,999-விலையில் வாங்க முடியும். கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் TFT இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 லேயர்உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன். இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC ப்ராசஸர் வசதி உள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.43,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.40,999-விலையில் வாங்க முடியும்.
மேலும் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட், 4500 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட் வார்ப் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி சாதனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீகேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி.
ஒன்பிளஸ் 9 5ஜி
அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.54,999-ஆக உள்ளது. ஆனால் இப்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.51,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 4500 எம்ஏஎச் பேட்டரி,வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டால்பி அட்மோஸ் அம்சம் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
உள்ளிட்ட பலவேறு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 9 5ஜி.
ரெட்மி 9 பிரைம்
அமேசான் தளத்தில் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.11,999-ஆக உள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.9,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக ரெட்மி 9 பிரைம் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 ஆக்டோ-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறதுரெட்மி 9 பிரைமின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர், 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி
அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு விற்பனையில் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.34,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் கேலக்ஸி எம்52 5ஜி மாடலை ரூ.25,999-விலையில் வாங்க முடியும். கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2,400 X 1,080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது கேலக்ஸி எம்52 5ஜி. கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications