அமேசான் சிறப்பு விற்பனை: அசத்தலான ஸ்மார்ட்போனகளுக்கு விலைகுறைப்பு.!
பண்டிகை காலம் என்பதால் அமேசான் தளத்தில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக லேப்டாப், ஸ்மர்ரட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போது விலைகுறைக்கப்பட்ட அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
iQOO Z3 5G ஸ்மார்ட்போன்
6ஜிபி ரேம் கொண்ட iQOO Z3 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.22,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.17,990-விலையில் வாங்க முடியும். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி சிப்செட், 4400 எம்ஏஎச் பேட்டரி, 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மர்ரட்போன். அதேபோல் 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே 2400 × 1080 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது iQOO Z3 5G ஸ்மார்ட்போன். பின்பு இந்த ஸ்மர்ரட்போனின் பின்புறம் 64எம்பி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த iQOO Z3 5G ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி நோட் 20
சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.86,000-என்று கூறப்படுகிறது. ஆனால் அமேசான்தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.44,999-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறம் 12எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,
செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. பின்பு தரமான எக்ஸிநோஸ் 990 எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
ரெட்மி 9 பிரைம்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.11,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.10,499-விலையில் வாங்க முடியும். 6.53' இன்ச் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட், 95 மெகா ஹெர்ட்ஸில் ஏ.ஆர்.எம் மாலி-ஜி 52 ஜிபியு, 13 மெகா பிக்சல் AI பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 5 மெகா பிக்சில் கொண்ட மேக்ரோ கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார், 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, 5020 எம்ஏஎச் பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்து இந்த ரெட்மி 9 பிரைம்.
ரியல்மி நார்சோ 30
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,499-விலையில் வாங்க முடியும்.
ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. 1080 x2400 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 90.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 405 பிபிஐ பிக்சல் அடர்த்தி, 580 நிட்ஸ் பிரைட்நஸ், மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன். மேலும் இந்த பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது ரியல்மி நார்சோ 30.


Click it and Unblock the Notifications