Home
Deal of the day

அமேசான் சிறப்பு விற்பனை: அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

அமேசான் வலைத்தளத்தை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சாதனத்திற்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. அதேபோல் தற்போது ஒரு சில லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்கள் சலுகை விலையில் கிடைக்கிறது.

அமேசான் சிறப்பு விற்பனை: ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

மேலும் அமேசான் தளத்தில் அசத்தலான ரெட்மி, சாம்சங் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பட்டுள்ளது. இப்போது விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10எஸ்

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.16,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையின் மூலம் இந்த சாதனத்தை ரூ.13,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.43 இன்ச் FHD + AMOLED பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே, மீடியா டெக் ஹீலியோ ஜி 95 ஆக்டோ-கோர் சிப்செட், 5,000 எம்ஏஎச் பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அமசங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா +
8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெட்மி 9 பவர்

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.13,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரூ.10,999-விலையில் வாங்க முடியும். மேலும் ரெட்மி 9 பவர் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. அதேபோல் பாதுகாப்பு வசதிக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஸ்னாப்டிராகன் 662 செயலி, 6000 எம்ஏஎச் பேட்டரி,18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை பொருத்தவரை இதன் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இருக்கிறது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 9 ஆக்டிவ்

ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.9,499-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரூ.8,499-விலையில் வாங்க முடியும். மேலும் ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் 6.53' இன்ச் அளவு கொண்ட எச்டி பிளஸ் 720 x 1,600
பிக்சல்கள் உடைய டாட் டிராப் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ G35 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி,பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த்
சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.22,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.18,999-விலையில் வாங்க முடியும். மேலும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் சூப்பர் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸப்ளே எச்டிஆர் 10 ஆதரவு, 5020 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்ங்கள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எம்12

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.9,499-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

English summary
amazon great indian sale: Discounts for Redmi smartphones: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X