அமேசான் சிறப்பு விற்பனை: குறைந்த விலையில் கிடைக்கும் ரெட்மி, சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!
அமேசான் வலைத்தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் பல்வேறு பொருட்களை கம்மி விலையில் வாங்க முடியும். அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங், விவோ, சியோமி, ஒப்போ. ஆப்பிள் ஐபோன், மோட்டோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின்
ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இந்த சிறப்பு விற்பனையை மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் விலைகுறைக்கப்பட்ட சாம்சங், ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாகப் பார்ப்போம்.
ரெட்மி நோட் 10டி 5ஜி
அமேசான் வலைத்தளத்தில் மிகவும் எதிர்பார்த்த ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.16.999-ஆக உள்ளது. ஆனால் இப்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரூ.14,999-விலையில்
வாங்க முடியும். குறிப்பாக ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் FHD+ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம், Reading Mode 3.0, 1500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, கொரில்லா கிளாஸ், மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 10டி 5ஜி.
சியோமி Mi 10i 5G
சியோமி நிறுவனத்தின் Mi 10i 5G ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.21,999-விலையில் வாங்க முடியும். மேலும்
6.67' இன்ச் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் உடன் கூடிய HDR மற்றும் HDR10 + டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, அட்ரினோ 619 ஜி.பீ.யுடன் 8nm குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட், 4820mAh பேட்டரி,
33W வேகமான சார்ஜிங் ஆதரவு, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108 மெகாபிக்சல் சாம்சங் எச்எம் 2 சென்சார் பிரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார்+ 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது Mi 10i 5G.
விவோ வி21இ 5ஜி
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.27,990-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.24,990-விலையில் வாங்க
முடியும். விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.மேலும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் ஆதரவு, மீடியாடெக் Dimensity 700 சிப்செட் ஆதரவு, 4000 எம்ஏஎச் பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ வி21இ 5ஜி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லெனஸ் கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது விவோ வி21இ 5ஜி.
சாம்சங் கேலக்ஸி எம்31
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.21,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.16,999-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் AMOLEDஇன்பினிட்டி-யு டிஸ்பிளேவடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2340 பிக்சல் தீர்மானம், ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதி, 6000எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதிஉள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது கேலக்ஸி எம்31 மாடல். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 32எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
iQOO 7 Legend 5G ஸ்மார்ட்போன்
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் iQOO 7 Legend 5G ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க முடியும். அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.44,990-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.39,900-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.62-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி ஸ்மார்ட்போன்,48எம்பி மெயின் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த iQOO 7 Legend 5G ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications