அமேசான் சிறப்பு விற்பனை: சலுகை விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்.!
பண்டிகை காலம் என்பதால் பிளிப்கார்ட்,அமேசான் போன்ற பல்வேறு ஆன்லைன் தளங்கள் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அமேசான் தளத்தில் பல்வேறு பொருட்களை நீங்கள் சலுகை விலையில் வாங்க முடியும்.

மேலும் இப்போது அமேசான் ஒரு சில அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சலுகை விலையில் கிடைக்கும் அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் அசல் விலை ரூ.43,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.40,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட், 4500 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட் வார்ப் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி ஸ்மார்ட்போன். இந்த சாதனத்தின்
பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீகேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி.
ஒன்பிளஸ் 9 5ஜி
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.54,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.51,999-விலையில் வாங்க முடியும். மேலும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்;ட்போன். அதாவது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 4500 எம்ஏஎச் பேட்டரி, வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டால்பி அட்மோஸ் அம்சம் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் 9 5ஜி சாதனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி
பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.
ரெட்மி 9 பவர்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.13,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.11,499-விலையில் வாங்க முடியும். மேலும் 6.53-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 2340 x 1080 பிக்சல் தீர்மானம், ஸ்னாப்டிராகன் 662 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி, 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி 9 பவர் மாடல். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி கேமராவுடன் மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
ரெட்மி 10 பிரைம்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.11,499-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6.5-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 2400x1080 பிக்சல் தீர்மானம், 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, மீடியாடெக் ஹீலியோ ஜி88 ஆக்டோ-கோர் பிராசஸர் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி கேமராவுடன் மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications