Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் ரெட்மி, சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.!

பண்டிகை காலம் என்பதால் தொடர்ந்து பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் ஒரு சில பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன். அதேபோல் இந்த இரண்டு வலைத்தள்களையும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும்.

அமேசான்: பட்ஜெட் விலையில் ரெட்மி ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.!

மேலும் இப்போது அமேசான் தளத்தில் சில ஸ்மார்ட்போன்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சலுகை அறிவிக்கப்பட்ட அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.22,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.18,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா +8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +2எம்பி போர்ட்ரெயிட் கேமரா+ 5எம்பி மேக்ரோ மோட் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர 6.67-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட், 5020 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அத்தலான ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.74,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.39,990-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி வைடு
கேமரா + 8எம்பி டெலி கேமரா+ 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர 6.5-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ஆக்டோ-கோர் சிப்செட், 4500 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 10எஸ்

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.16,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி
அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10எஸ். அதேபோல் 6.43-இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி95 ஆக்டோ-கோர் சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10எஸ்.

iQOO Z5 5G ஸ்மார்ட்போன்

iQOO Z5 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.32,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.26,990-விலையில் வாங்க முடியும். மேலும் 64எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, குவால்காம்
ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 4கே வீடியோ பதிவு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த iQOO Z5 5G ஸ்மார்ட்போன்.

iQOO 7 5G ஸ்மார்ட்போன்

iQOO 7 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.34,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.29,990-விலையில் வாங்க முடியும். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி சிப்செட், 48எம்பி ரியர் கேமரா,
4400 எம்ஏஎச் பேட்டரி. 66 வாட் ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த iQOO 7 5G ஸ்மார்ட்போன்

English summary
amazon great indian sale: Discounts for Redmi and iQOO smartphones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X