அமேசான் சிறப்பு விற்பனை: ஒப்போ, ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
அமேசான் வலைத்தளத்தை நாடு முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்த தளத்தில் ஒரு சில பொருட்கள் சலுகை விலையில் கிடைப்பதால் அதிக மக்கள் இதை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ ஏ31
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனின் அசல் ரூ.12,990-ஆக உள்ளது. ஆனால் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.11,490-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி மெயின்
கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் டிஸ்பிளே வசதி, 1600 x 720 பிக்சல் தீர்மானம், மீடியாடெக் பி35 ஆக்டோ-கோர் சிப்செட், 4230எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி நோட் 20
சாமசங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.86,000-ஆக உள்ளது. ஆனால் அமேசானில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.44,990-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் எக்ஸிநோஸ் 990 எஸ்ஒசி சிப்செட் வசதி, 4300 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன். அதேபோல் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன்.
ரெட்மி 9 பிரைம்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.11,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.9,999-விலையில் வாங்க முடியும் 6.53' இன்ச் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, அண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட டார்க் மோடு இயங்குதளம், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட், 95 மெகா ஹெர்ட்ஸில் ஏ.ஆர்.எம் மாலி-ஜி 52 ஜிபியு, 5020 எம்ஏஎச் பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 மெகா பிக்சல் AI பிரைமரி கேமரா + 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 5 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ கேமரா + 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. அதேபோல் 8மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராடன் வெளிவந்துள்ளது ரெட்மி 9 பிரைம்.
சியோமி மி 11எக்ஸ் ப்ரோ 5ஜி
சியோமி மி 11எக்ஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.47,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரூ.39,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 885 சிப்செட், 6.67-இன்ச் எஃப்எச்டி டிஸ்பிளே, 1080x2400 பிக்சல்கள், 4520 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி மி 11எக்ஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
டெக்னோ ஸ்பார்க் 7டி
டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.10,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.8,499-விலையில் வாங்க முடியும். டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது. பின்பு 720 × 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், ஹீலியோ 35 கேமிங் பிராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications