அமேசான் சிறப்பு விற்பனை: சலுகை விலையில் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.!
அமேசான் தளத்தில் தினசரி ஏதாவது ஒரு பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக அவ்வப்போது சிறப்பு சலுகையும் வழங்குகிறது இந்த அமேசான் நிறுவனம். எனவே இந்தியாவில் அதிக மக்கள் இந்த அமேசான் தளத்தை பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் ஒரு சில ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வாங்க முடியும். அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாக இப்போது பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.38,999-ஆக உள்ளது.ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.35,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080 x 2400 பிக்சல் தீர்மானம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி
சிப்செட் வசதி, 4500 எம்ஏஎச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா + 5எம்பி டெப்த் கேமரா என மொத்தம் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி எம்31
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.21,999-ஆக உள்ளது. ஆனால் இப்போது அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் 16,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் டிஸ்பிளே,2340 x 1080பிக்சல் தீர்மானம், ஆண்ட்ராய்டு இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, 1.7ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸ்நோஸ் 9611 ஆக்டோ-கோர் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி டெப்த் கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும்,
வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
ஐக்யூ 7 லெஜண்ட் 5ஜி ஸ்மார்ட்போன்
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ 7 லெஜண்ட் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.44,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.39,990-விலையில் வாங்க முடியும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி சிப்செட், 6.62-இன்ச் டிஸ்பிளே,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 4000 எம்ஏஎச் பேட்டரி, 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஐக்யூ 7 லெஜண்ட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 48எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி நோட் 10டி 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.18,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.16,499-விலையில் வாங்க முடியும். மேலும் 6.5-இன்ச் டிஸ்பிளே, 2400x1080 பிக்சல் தீர்மானம்,180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ஆதரவு,கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
ஒப்போ ஏ31
ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.12,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.11,490-விலையில் வாங்க முடியும். மேலும் 6.5-இன்ச் டிஸ்பிளே, 1600 x 720 பிக்சல் தீர்மானம்,12எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, மீடியாடெக் பி35 சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications