Home
Deal of the day

அமேசான் சிறப்பு சலுகை: கம்மி விலையில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.!

பண்டிகை காலம் என்பதால் அமேசான் தளத்தில் ஒரு சில பொருட்கள் சலுகை விலையில் கிடைக்கின்றன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக
இந்த சிறப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக லேப்டாப், ஸ்மார்ட்போன், டிவி
உள்ளிட்ட சாதனங்களை இந்த தளத்தில் கம்மி விலையில் வாங்க முடியும்.

அமேசான் சிறப்பு சலுகை: கம்மி விலையில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

குறிப்பாக இப்போது ஐபோன், ஒன்பிளஸ், சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் கம்மி விலையில் வாங்க கிடைக்கிறது. தற்போது அமேசான் தளத்தில் சலுகை விலையில் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோன் 11 (64ஜிபி)

அமேசான் தளத்தில் ஆப்பிள் ஐபோன் 11 மாடலை சலுகை விலையில் வாங்க முடியும். அதாவது இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.49,900-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.41,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் 6.1' இன்ச் கொண்ட லீகுய்ட் ரெட்டினா டிஸ்பிளே, A13 பயோனிக் சிப் பிராசஸர், புதிய அன்டோனைஸ்ட் அலுமினியம் மற்றும் டஃப் கிளாஸ் டிசைன், 12 மெகா பிக்சல் டூயல் லென்ஸ் கேமரா செட்டப், 12 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு மற்றும் வைடு ஆங்கிள் கேமரா, 12 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, ஃபாஸ்டர் ஃபேஸ் ஐடி, IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (2 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும்), லைட்டனிங் கனெக்டர் உடன் கூடிய ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்12

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.9,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதாவது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎஃப்டி எல்சிடி டிஸ்பிளே, 720 x 1600 பிக்சல் தீர்மானம், எக்ஸிநோஸ் 850 பிராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி

ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.69,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகை மூலம் ரூ.65,999-விலையில் வாங்க முடியும். 6.7-இன்ச் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்,குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்,
4500 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 2எம்பி Monochorme லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்
என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 10எஸ்

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.16,999-ஆக உள்ளது. அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.13,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு மேகரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும்,
வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 10எஸ். அதேபோல் 6.43-இன்ச் டிஸ்பிளே, 20:9 என்ற திரைவிகிதம், 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன்.

டெக்னோ ஸ்பார்க் 7டி

டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.10,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.8,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.52-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே, 720 × 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், ஹீலியோ 35 கேமிங் பிராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் 7டி .

English summary
amazon great indian sale: Discounts for OnePlus and Redmi smartphones: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X