அமேசான் சிறப்பு விற்பனை: அசுஸ், டெல் லேப்டாப் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
அமேசான் தளத்தில் தினசரி எதாவது ஒரு சாதனத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும். மேலும்; இப்போது அமேசான் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இதில் பல்வேறு ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களை மலிவு விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையை மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் விலைகுறைக்கப்பட்ட லேப்டாப் மாடல்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஹெச்பி 15 Ryzen 5 4500U
ஹெச்பி நிறுவனத்தின் லேப்டாப் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் ஹெச்பி 15 Ryzen 5 4500U மாடலுக்கு இப்போது அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த லேப்டாப் மாடலின் அசல் விலை ரூ.49,120-ஆக உள்ளது. ஆனால் இப்போது அமேசான் தளத்தில் இந்த லேப்டாப் சாதனத்தை ரூ.44,990-க்கு வாங்க முடியும். அதேபோல் 15.6-இன்ச் டிஸ்பிளே, AMD ரேடியான் வேகா 8 கிராபிக்ஸ், AMD Ryzen 5 4500U பிராசஸர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப்.
அசுஸ் TUF கேமிங் ஏ15 (2021)
அமேசான் வலைத்தளத்தில் மிகவும் எதிர்பார்த்த அசுஸ் TUF கேமிங் ஏ15 (2021) மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் 15.6-இன்ச் எஃப்எச்டி டிஸ்பிளே, 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆர்டிஎக்ஸ் 3050 4 ஜிபி கிராபிக்ஸ், 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி, AMD Ryzen 7 4800H பிராசஸர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த அசுஸ் நிறுவனத்தின் லேப்டாப் மாடலின் அசல் விலை ரூ.97,990-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.69,990-விலையில் வாங்க முடியும்.
அசுஸ் TUF கேமிங் எஃப்15 லேப்டாப்
அசுஸ் TUF கேமிங் எஃப்15 லேப்டாப் மாடலுக்கு அமேசான் வலைத்தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சானத்தின் அசல் விலை ரூ.84,990-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.58,990-விலையில் வாங்க முடியும். மேலும் 15.6-இன்ச் எஃப்எச்டி டிஸ்பிளே, 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10 வது ஜென் இன்டெல் கோர் i5-10300H பிராசஸர்,8GB DDR4 2933MHz ரேம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேமிங் லேப்டாப். குறிப்பாக இந்த லேப்டாப் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.
டெல் இன்ஸ்பிரான் 3502
டெல் இன்ஸ்பிரான் 3502 மாடல் ஆனது 15.6-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ஆதரவு, இன்டெல் UHD கிராபிக்ஸ், இன்டெல் பென்டியம் சில்வர்N5030 பிராசஸர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை
கொண்டுள்ளது இந்த டெல் இன்ஸ்பிரான் 3502 லேப்டாப் மாடல். மேலும் இந்த டெல் இன்ஸ்பிரான் 3502 மாடலின் அசல் விலை ரூ.47,914-ஆக உள்ளது. ஆனால் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.31,489-விலையில் வாங்க முடியும்.
லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 5
லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 5 மாடல் ஆனது 11 வது ஜென் இன்டெல் Tiger Lake கோர் i5-1135G7 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் ஆதரவு, 15.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே, 1920x1080 பிக்சல் தீர்மானம், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 5 மாடல். குறிப்பாக இந்த லேப்டாப் மாடலுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.1,04,290-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.62,990-விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications