Home
Deal of the day

அமேசான் தளத்தில் அதிநவீன கேமரா மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடி.!

பிளிப்கார்ட் தளத்திற்கு போட்டியாக அமேசான் வலைதளத்திலும் தினசரி எதாவது ஒரு சாதனத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக அமேசான் தளத்தில் பிளிப்கார்ட் தளத்தை விட கூடுதல் சலுகைகள் கிடைக்கும். கிட்டத்தட்ட அனைத்து பொருட்களுக்கும் இந்த அமேசான் தளத்தில் கிடைப்பதால், இதை மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கி விட்டனர் என்றுதான் கூறவேண்டும்

அமேசான் தளத்தில் அதிநவீன கேமரா மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடி.!

மேலும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் சிறப்பு விற்பனை வரும் அக்டோபர் 3-ம் தேதி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் நீங்கள் எதிர்பார்த்த ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல சாதனங்களை கம்மி விலையில் வாங்க முடியும். அதேபோல் இப்போது கூட சில சாதனங்கள் இந்த அமேசான் தளத்தில் கம்மி விலையில் கிடைக்கின்றன. அதாவது அமேசான் தளத்தில் சில கேமரா மாடல்களுக்கு இப்போது கூட சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கேமராக்களின் பட்டியலை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

கேனான் EOS 1500D 24.1 டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமரா

கேனான் நிறுவனத்தின் கேமரா மாடல்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவுகிறது கேனான் நிறுவனத்தின் கேமராக்கள். மேலும் இந்தியாவில் இந்நிறுவனத்தின் கேமரா மாடல்களை
அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் கேனான் EOS 1500D 24.1 டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமரா மாடலுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தை இப்போது ரூ.35,990-விலையில் வாங்க முடியம். குறிப்பாக APS-C CMOS சென்சார் 24.1 மெகாபிக்சல் ஆதரவு, monaural மைக்ரோஃபோன், சவுண்ட்-ரெக்கார்டிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான கேமரா. இதுதவிர வைஃபை, என்எப்சி மற்றும் புளூடூத் உள்ளிட்ட அம்சங்களையும் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த கேனான் EOS 1500D 24.1 டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமரா மாடல். குறிப்பாக இந்த மாடல் கருப்பு நிறத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனி டிஜிட்டல் Vlog கேமரா ZV 1

சோனி நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சோனி டிஜிட்டல் Vlog கேமரா ZV 1 மாடலை அமேசான் தளத்தில் குறைந்த விலையில் வாங்க முடியும். அதாவது இந்த கேமரா மாடலின் அசல் விலை ரூ.77,990-ஆக உள்ளது. ஆனால் இப்போது அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.70,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஃபிளிப் ஸ்கிரீன், உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன், ப்ளூடூத் ஷூட்டிங் கிரிப், 4 கே Vlogging கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அமசங்களை கொண்டுள்ளது இந்த சோனி கேமரா மாடல். மேலும் 20.1 மெகாபிக்சல் எக்ஸ்மோர் ஆர்எஸ் சிஎம்ஓஎஸ் சென்சார், ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி,
1 யூனிட் எஸ்டி கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அதநவீன சோனி கேமரா.

கோப்ரோ ஹீரோ 8 பிளாக் CHDHX-801 12 MP ஆக்ஷன் கேமரா

அமேசான் தளத்தில் கோப்ரோ ஹீரோ 8 பிளாக் CHDHX-801 12 MP ஆக்ஷன் கேமரா மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் முந்தைய விலை ரூ.36,999-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.29,170-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர குறிப்பிட்ட சில சலுகைகளும் இந்த கேமராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் உள்ள ஃப்ளாஷ்கள், மைக்ரோஃபோன்கள், எல்சிடி திரை போன்வை சிறந்த கேமரா அனுபவத்தை கொடுக்கும். பின்பு ஆர்வமுள்ள படைப்பாளிகள் கற்பனை செய்த வீடியோவை அப்படியே எடுக்க உதவும் இந்த கோப்ரோ கேமரா மாடல். 1080p இல் லைவ் ஸ்ட்ரீம், ஹைப்பர்ஸ்மூத் stabilization உள்ளிட்ட பல்வேறு
சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கோப்ரோ கேமரா மாடல்.

Fujifilm இன்ஸ்டாக்ஸ் மினி 9 கேமரா (ஐஸ் ப்ளூ)

Fujifilm இன்ஸ்டாக்ஸ் மினி 9 கேமரா (ஐஸ் ப்ளூ) மாடலுக்கு அமேசான் தளத்தில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.5,330-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையின் மூலம் இந்த சாதனத்தை ரூ.3,999-விலையில் வாங்க முடியும். இந்த கேமரா உதவியுடன் க்ரெடிட் கார்ட் அளவில் போட்டாக்களை எடுத்து கொள்ள முடியும். இதன் முன்பகுதியில் புதிதாக செலஃபீ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இது AA சைஸ் பேட்டரிகள் கொண்டு ஜார்ஜ் செய்து கொள்ளலாம். ஒரு பேர் பேட்டரி கொண்டு 100 போட்டாக்கள் எடுக்க முடியும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது சாதாரண கேமராக்களை விட ஒருபடி மேலே என்று தான் கூற வேண்டும், இதில் எடுக்கும் போட்டோக்களை அப்போதே பிரிண்ட் செய்யும் ஆற்றல் கொண்டது.

கேனான் பவர்ஷாட் SX540HS 20.3MP டிஜிட்டல் கேமரா

கேனான் பவர்ஷாட் SX540HS 20.3MP டிஜிட்டல் கேமரா ஆனது 50x ஆப்டிகல் ஜூம் உடன்வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த கேமரா மாடலுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி
இந்த கேமராவின் அசல் விலை ரூ.23,795-ஆக உள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையின் மூலம் 22,999-விலையில் வாங்க முடியும். மேலும் எச்டி வீடியோ ஆதரவு, manual control உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேமரா மாடல். மேலும் வைஃபை, என்எப்சி மற்றும் புளூடூத் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேனான் கேமரா மாடல்.

English summary
amazon great indian sale: 60 percentage discount on Digital Cameras: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X