அமேசான் சிறப்பு விற்பனை: தரமான ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!
அமேசான் தளத்தில் பல்வேறு ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அசத்தலான தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனை சில நாட்கள் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் அமேசான் தளத்தில் இந்த
சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் நீங்கள் மிகவும் எதிர்பார்த்த ஐபோன், சியோமி, ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சியோமி நிறுவனத்தின் அதிகமான ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது விலைகுறைக்கப்பட்ட அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ஆப்பிள் ஐபோன் 11 (64ஜிபி)
ஆப்பிள் ஐபோன் 11 (64ஜிபி) மாடலின் அசல் விலை ரூ.54,900-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.38,999-விலையில் வாங்க முடியும். மேலும் இதுதவிர சில குறிப்பிட்ட சலுகைகள் ஐபோன் 11 மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐபோன் 11 மாடல் ஆனது 6.1-இன்ச் Liquid Retina எச்டி எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும்புதிய அன்டோனைஸ்ட் அலுமினியம் மற்றும் டஃப் கிளாஸ் டிசைன்,A13 பயோனிக் சிப் பிராசஸர், 12 மெகா பிக்சல் டூயல் லென்ஸ் கேமரா செட்டப், 12 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு மற்றும் வைடு ஆங்கிள் கேமரா, 12 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (2 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும்), உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஐபோன் 11 மாடல்.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.74,999-ஆக உள்;ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.36,990-விலையில் வாங்க முடியும். மேலும் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலி மூலம் இயக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் அமோலட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளேவுடன், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் ரிப்போர்ட் வீதத்துடன் வருகிறது. இது 12 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார், 12 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் சென்சார் மற்றும் 8 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவற்றுடன் வருகிறது. இதில் 32 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி 9ஏ
அமேசான் தளத்தில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.8,499-ஆகஉள்ளது. ஆனால் இந்த விறப்பு விற்பனையில் ரூ.6,999-விலையில் வாங்க முடியும்.ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது. இந்த ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதி உடன் IMG PowerVR GE8320 GPU இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்தது. ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி மி 11எக்ஸ் 5ஜி
அமேசான் தளத்தில் சியோமி மி 11எக்ஸ் 5ஜி ஸ்மாரட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.33,999-ஆக உள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகை மூலம் ரூ.26,999-விலையில் வாங்க முடியும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி சிப்செட், 48எம்பி ரியர் கேமரா, 20எம்பி செல்பீ கேமரா, 4520எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு தரமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications