அமேசான் சிறப்பு விற்பனை: அட்டகாசமான ஸமார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

அமேசான் தளத்தில் பல்வேறு சாதனங்களை கம்மி விலையில் வாங்க முடியும். குறிப்பாக பண்டிகை காலம் என்பதால் அமேசான் தளத்தில் சில பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடியும். அதேபால் அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக பிளிப்கார்ட்
தளத்திலும் அவ்வப்போது சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன..

அமேசான் சிறப்பு விற்பனை: அட்டகாசமான ஸமார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

மேலும் இப்போது கூட அமேசான் தளத்தில் சில ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் வாங்க முடியும். அதன்படி பட்ஜெட் விலையில் கிடைக்கும் அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 9 பவர்

Redmi 9 Power

4ஜிபி ரேம் மற்றும 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.13,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.10,999-விலையில் வாங்க முடியும். 6.53 இன்ச் முழு எஃப்எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே,
2340x1080பிக்சல்கள் தீர்மானம், 19:5:9 என்ற திரைவிகிதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட், 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற பல அம்சங்கள் இவற்றுள்ள அடக்கம். அதேபோல் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை பொருத்தவரை இதன் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இருக்கிறது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

ஒப்போ ஏ31

OPPO A31

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட் ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.12,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் இந்த சாதனத்ததை ரூ.11,490-விலையில் வாங்க முடியும். மேலும் ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் மாடலில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார்+ 2எம்பி டெப்த் சென்சார் என மூன்றுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதேபோல் 4230எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன்.

டெக்னோ ஸ்பார்க் 7டி

Tecno Spark 7T 6000 mAh Battery| 48 MP AI Dual Rear Camera

அமேசான் தளத்தில் டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க முடியும். அதாவது டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.10,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் இந்த சாதனத்தை ரூ.8,499-விலையில் வாங்க முடியும். 6.52-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே, 720 × 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், ஹீலியோ 35 கேமிங் பிராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன்.

விவோ வி21இ 5ஜி

Vivo V21e 5G Smartphone

விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.27,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையின் மூலம் ரூ.24,990-விலையில் வாங்க முடியும். 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் ஆதரவு, மீடியாடெக் Dimensity 700 சிப்செட், 4000 எம்ஏஎச் பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன். இந்த விவோ வி21இ 5ஜி பின்புறம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லெனஸ் கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்
அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

Mi 10i 5G ஸ்மார்ட்போன்

Mi 10i

Mi 10i 5G சாதனத்தின் அசல் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.21,999-விலையில் வாங்க முடியும். 6.67' இன்ச் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் உடன் கூடிய HDR மற்றும் HDR10 + டிஸ்பிளே,
120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட், 4820mAh பேட்டரி,33Wவேகமான சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த Mi 10i 5G ஸ்மார்ட்போன்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X