Home
Deal of the day

அமேசான் சிறப்பு சலுகை: பட்ஜெட் விலையில் லேப்டாப்,ஸ்மார்ட்போன்கள்.!

இந்தியாவில் அமேசான் தளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதாவது இந்த தளத்தில் குறிப்பிட்ட சாதனங்கள் சலுகை விலையில் கிடைக்கிறது. அதேபோல் இப்போது கூட சில லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல சாதனங்களை சலுகை
விலையில் வாங்க முடியும்.

அமேசான் சிறப்பு சலுகை: பட்ஜெட் விலையில் லேப்டாப்,ஸ்மார்ட்போன்கள்.!

அதன்படி தற்போது ஒரு சில லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு அமேசான் தளத்தில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சலுகை அறிவிக்கப்பட்ட அந்த லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அசுஸ் ROG Strix G17

அசுஸ் ROG Strix G17 மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.1,02,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த சாதனத்தை ரூ.79,990-விலையில் வாங்க முடியும்.
17.3-இன்ச் எஃப்எச்டி டிஸ்பிளே, 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,ஜிடிஎக்ஸ் 1650 4 ஜிபி கிராபிக்ஸ், AMD Ryzen 7 4800H பிராசஸர், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசுஸ் லேப்டாப் மாடல். அதேபோல் இந்த லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு தகுந்த மென்பொருள் வசதி இந்த சாதனத்தில் உள்ளது.

டெல் இன்ஸ்பிரான் 3502 லேப்டாப்

டெல் நிறுவனத்தின் லேப்டாப் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல் இன்ஸ்பிரான் 3502 லேப்டாப் மாடலின் அசல் விலை ரூ.42,563-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில்அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.35,600-விலையில் வாங்க முடியும். 15.6-இன்ச் எஃப்எச் டிஸ்பிளே, 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி, இன்டெல் UHD கிராபிக்ஸ், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான லேப்டாப் மாடல். குறிப்பாக யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெல் லேப்டாப் மாடல்.

ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி

ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.43,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.40,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.5-இன்ச் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி Monochrome கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட், 4500 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஆண்ட்ராய்டு 1 இயங்குதளம் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் 9 5ஜி

ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.54,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.51,999-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி Monochorme லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வசதி உள்ளது. குறிப்பாக 4500 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ரெட்மி 10 பிரைம்

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். மேலும் மீடியாடெக் ஹீலியோ ஜி88 ஆக்டோ-கோர் சிப்செட், 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 50எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி 10 பிரைம்.

English summary
amazon great indian sale: 30 percentage discount on Laptops and Smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X