அவ்ளோதான்.. அம்புட்டு பேரும் வாங்குவாங்க.. 6000mAh பேட்டரி OnePlus போன் மீது ரூ.12000 விலை குறைப்பு!
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2025 (Amazon Great Indian Sale 2025) விற்பனைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இது வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் "வழக்கம் போல" பிரைம் மெம்பர்களுக்கு 24 மணிநேரத்திற்கு முன்பாகவே ஆபர்களுக்கான அணுகல்களை வழங்கும்.
அமேசானின் இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையில் ஆப்பிளின் ஐபோன் மாடல்களுக்கு அடுத்தபடியாக, ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபர்களே அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக லேட்டஸ்ட் ஒன்பிளஸ் 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபர்கள். ஒருவழியாக அமேசான் ஒன்பிளஸ் 13 உட்பட பல ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபர்களை அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 13 மீதான ஆபர்: ஒன்பிளஸ் கிளப்பின் எக்ஸ் தள பதிவின்படி, வரவிருக்கும் அமேசான் விற்பனையில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் +256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, அதன் அசல் அறிமுக விலையான ரூ.69,999 க்கு பதிலாக ரூ.57,999 க்கு வாங்க கிடைக்கும்
இந்த தள்ளுபடி விலையில், அமேசான் இந்தியா தளத்தின் சலுகை மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும்போது கிடைக்கம் தள்ளுபடி விலையாக இருக்கும். ஒன்பிளஸ் 13 உடன் சேர்த்து, ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனின் மீதும் டிஸ்கவுண்ட் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.54,999 க்கு பதிலாக அமேசான் விற்பனையின் போது ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கும்
இதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) ஸ்மார்ட்போன்கள் ஆனது முறையே ரூ.25,499 மற்றும் ரூ. 28,749 க்கு வாங்க கிடைக்கும். மேலும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4 Lite) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போனானது ரூ.18,499 க்கு வாங்க கிடைக்கும். இந்த விலைகள் அனைத்திலும் எஸ்பிஐ பேங்க் கார்டு அட்டை அடிப்படையிலான தள்ளுபடிகளும் அடங்கும்.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32 இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு உடன் 5850mAh பேட்டரி
ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் ஆக்சிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) ஓஎஸ்
- 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (சோனி LYT-700 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எப் /1.8 அபெர்க்ஷர்)
- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 120-டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- சாம்சங் ISOCELL JN5 சென்சார் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடன் கூடிய 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு உடனான 6,800mAh பேட்டரி


Click it and Unblock the Notifications