ரூ.1000, ரூ.2000 இல்ல.. ரூ.17000 டிஸ்கவுண்ட்.. Underwater Camera மோட் உடன் வரும் இந்த Realme போன் மீது!
ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதி செய்துள்ள நிலையில், அமேசான் இந்தியா (Amazon India ) வலைத்தளம் ஆனது ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போன் மீது மிகப்பெரிய விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.
தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நேரலையில் உள்ள கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025 விற்பனையின் ஒரு பகுதியாக, அண்டர் வாட்டர் கேமரா மோட் (Under Water Camera Mode) உடன் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது ரூ.17,000 வரையிலான டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது.

நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,999 க்கு அறிமுகமானது. தற்போது நேரடி விலை குறைப்பு, பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் ஆகியவற்றின் கீழ் ரூ.42,999 க்கு வாங்க கிடைக்கும் என்பதை மொபைல் போன்கள் மீதான அமேசான் பேனர் வெளிப்படுகிறது
ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு
- டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
- 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம்
- 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6.0 ஓஎஸ்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்906 ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்882 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 8 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா-வைட் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5800எம்ஏஎச் பேட்டரி
- இன் டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி69 ரேட்டிங்
- அளவீட்டில் 162.45 x 76.89 x 8.55 மிமீ
- எடையில் சுமார் 222 கிராம்
ரியல்மி ஜிடி 8 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்? ரியல்மி ஜிடி 8 சீரீஸின் (Realme GT 8 Series) கீழ் ரியல்மி ஜிடி 8 (Realme GT 8) மற்றும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸ் அடுத்த மாதம், அதாவது வருகிற 2205 அக்டோபரில் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி 8 சீரீஸ் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ரியல்மி ஜிடி 8 மற்றும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஆகிய 2 மாடல்களின் ரியர் கேமரா செட்டப்பிலும் 200 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா (200MP Telephoto Camera) இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே பிளாட் ஆன 2கே அமோஎல்இடி டிஸ்பிளேவையும் (2K AMOLED Display) கொண்டிருக்கலாம். சிப்செட்டை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது, இந்த வார இறுதியில் குவால்காம் (Qualcomm) நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ள ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் மூலம் இயக்கப்படும் முதல் போன்களாக இருக்கலாம்.
இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு டிஸ்பிளே சைஸ் மாற்றம் பேட்டரி டிப்பார்ட்மென்ட்டில் இருக்கலாம். ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆன ரியல்மி ஜிடி 8 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 7000mAh பேட்டரியை பேக் செய்யலாம். ப்ரோ வேரியண்ட்டின் டிஸ்பிளே சைஸ் மற்றும் பேட்டரி கெப்பாசிட்டி குறித்த விவரங்கள் எதுவும் லீக் ஆகவில்லை.


Click it and Unblock the Notifications








