Home
Deal of the day

இன்றைய Amazon Deals: ரூ.6000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்; இதோ லிஸ்ட்!

ஆன்லைவன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டு வழங்கும் சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. சில தளங்களில் பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடிகள் வழங்கினாலும், அமேசானில் தினசரி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அமேசான் தளத்தில் டீல் ஆஃப் தின சலுகையாக பல்வேறு சாதனங்களுக்கு தினசரி தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது அமேசானில் சலுகையுடன் ரூ.6000 விலைப்பிரிவில் கிடைக்கும் சாதனங்கள் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

இன்றைய Amazon Deals: ரூ.6000க்குள் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்!

Nokia C01 Plus

நோக்கியா சி01 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது ரூ.6,999 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.6,298 என விற்பனைக்கு கிடைக்கிறது. இதை விட கம்மி விலையில் நோக்கியா ஸ்மார்ட்போன் என்பது மிக அரிது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் 10% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனானது 5.45 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் ஸ்க்ரீன் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 5 எம்பி ரியர் கேமரா மற்றும் 2 எம்பி முன்புற கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது.

LAVA X2

லாவா எக்ஸ்2 ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் ரூ.7999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இது ரூ.6,999 என கிடைக்கிறது. அமேசானில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 13% வரை தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் இது 6.5 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே, 8 எம்பி டூயல் ஏஐ கேமரா வசதியை கொண்டிருக்கிறது. லாவா எக்ஸ்2 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஏ25 ஆக்டோ கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு ஃபேஸ் அன்லாக் அம்சம் இருக்கிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Redmi 9A Sport

ரெட்மி 9ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனானது ரூ.8,499 என்ற விலையில் கிடைத்தது. தற்போது அமேசான் சலுகையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.6999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 18% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்ஜெட் விலைப் பிரிவில் புகழ் பெற்ற நிறுவனம் ரெட்மி ஆகும். ரெட்மி நிறுவனத்தின் சாதனம் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இது ஆக்டோ கோர் ஹீலியோ ஜி25 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி, 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது. ஏஐ போர்ட்ரெய்ட் வசதியுடன் கூடிய 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி முன்புற கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.

Realme Narzo 50i

ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போனானது மின்ட் க்ரீன் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இந்த சாதனம் விற்பனைக்கு கிடைக்கிறது. ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போனானது ரூ.7999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.7499 என கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இந்த சாதனம் விற்பனைக்கு கிடைக்கிறது. 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் 8 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்புற கேமரா ஆதரவு இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிலும் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

Lenovo K3 Note

லெனோவா கே3 நோட் சாதனமானது மஞ்சள் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனமானது ரூ.9999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.6499 என கிடைக்கிறது. லெனோவா கே3 நோட் ஸ்மார்ட்போனுக்கு 35% வரை தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. 5.5 இன்ச் ஐபிஎஸ் மல்டி டச் டிஸ்ப்ளே உடன் 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்புற கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2900 எம்ஏஎச் லித்தியம் அயன் பேட்டரி, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு வசதி இருக்கிறது.

English summary
Amazon Deal of the Day: Rs.6000 price range smartphones available with huge discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X