அமேசானில் இந்த 5 போன்களுக்கும் அட்டகாச தள்ளுபடி.! உடனே முந்துங்கள்.!
அமேசான் தளத்தில் தொடர்ந்து பல்வேறு சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் பண்டிகை காலம் என்பதால் இனி போன்களுக்கு அதிகமான சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்படும் என என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் போன்களின் பட்டியலை இப்போதுவிரிவாகப் பார்ப்போம்.
ஒப்போ ஏ54
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 27 சதவீதம் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.10,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் மாடல். ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 (எம்டி6765) பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது.
13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன். மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள்ள அடக்கம். ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அட்டகாச அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
சாம்சங் கேலக்ஸி ஏ13
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 24 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை தற்போது ரூ.13,999-விலையில் வாங்க முடியும்.
சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080 x 2408 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனில் 50எம்பி ரியர் கேமரா ஆதரவு உள்ளது. எனவே இதன் உதவியுடன் தௌவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
விவோ Y21G
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட விவோ Y21G ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 25 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,499-விலையில் வாங்க முடியும்.
குறிப்பாக இந்த விவோ ஸ்மார்ட்போன் 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
விவோ Y21G ஸ்மார்ட்போன் 13எம்பி மெயின் கேமரா +2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ போன்.
ரெட்மி நோட் 10எஸ்
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில 18 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை தற்போது 13,999-விலையில் வாங்க முடியும். இந்த போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
இந்த போன் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வசதியோடு வருகிறது. மேலும் 2400 x 1080 பிக்சல்ஸ், ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட், ஆண்ட்ராய்டு இயங்குதளம் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன்.
ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 13எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
ஒப்போ ஏ15எஸ்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 29 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனை தற்போது ரூ.9,990-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் வாட்டர் டிராப் டிஸ்ப்ளே எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன், 720x1520பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது.
ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் ஹீலியோ பி35 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4230 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வருகிறது. 13எம்பி மெயின்
கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
அதேபோல் 8எம்பி செல்பி கேமரா,4230 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications