ரெட்மி ஸ்மார்ட்போன்களை வாங்க சூப்பர் வாய்ப்பு.. அமேசான் அதிரடி சலுகை!
ரெட்மி நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. அதேபோல் ரெட்மி நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் 5ஜி போன்களை கூட அறிமுகம் செய்துள்ளது.

விரைவில் இந்நிறுவனம் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கும் அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன்களைப் பார்ப்போம்.
ரெட்மி நோட் 10டி 5ஜி
அமேசான் தளத்தில் ரெட்மி நோட் 10டி 5ஜி போனுக்கு 29 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் FHD+ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
2400 x 1080 பிக்சலஸ், Reading Mode 3.0, 1500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, கொரில்லா கிளாஸ், மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் இவற்றுள் அடக்கம். மேலும் ரெட்மி நோட் 10டி 5ஜி போன் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 10டி 5ஜி மாடல்.
ரெட்மி நோட் 10 ப்ரோ
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ போனுக்கு அமேசான் தளத்தில் 20 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.15,999-விலையில் வாங்க முடியும். இந்த ரெட்மி போன் 6.67 இன்ச் AMOLED ஃபுல் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
ரெட்மி நோட் 10 ப்ரோ போன் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெலிமேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன்.
குறிப்பாக இந்த ரெட்மி நோட் 10 ப்ரோ போனில் 5020 எம்ஏஎச் பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ரெட்மி நோட் 11டி 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 11டி 5ஜி போனுக்கு அமேசான் தளத்தில் 24 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.15,999-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன்.
இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட சூப்பரான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி போன்.
ரெட்மி நோட் 10எஸ்
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 10எஸ் போனுக்கு அமேசான் தளத்தில் 26 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.12,499-விலையில் வாங்க முடியும். இந்த போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக இந்த போன் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வசதியோடு வருகிறது. மேலும் 2400 x 1080 பிக்சல்ஸ், ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட், ஆண்ட்ராய்டு இயங்குதளம் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன்.
ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 13எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
ரெட்மி நோட் 11
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 11 போனுக்கு அமேசான் தளத்தில் 25 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,499-விலையில் வாங்க முடியும். இந்த ரெட்மி போன் 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி நோட் 11.
50எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோலென்ஸ் +2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன். மேலும் 13எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications