விஸ்வரூப விற்பனை.. 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?
7000mAh பேட்டரி, 45W சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் மட்டுமல்லாமல், 144Hz டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட் கொண்ட மாடலாக வெளியாகிய ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 9 சதவீத தள்ளுபடி போக ரூ.19,999 விலைக்கு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வாங்க கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.18,999 விலைக்கு இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

ரியல்மி பி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P4x 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 4nm) சிப்செட் கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பேக் செய்துள்ளது.
ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) மற்றும் மாலி ஜி 615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 5300 எம்எம் விசி ப்ரோஸ்ட்கோர் கூலிங் சிஸ்டம் (VC FrostCore Cooling System) கொண்ட 7000mAh பேட்டரியை இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
144 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுத்துள்ளது. மேலும், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1000 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கொடுத்துள்ளது. 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொண்ட டிஸ்பிளேவாக இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோகுரோம் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மெயின் கேமராவுக்கு ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OV50D40) சென்சார் மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. 4K ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம்.
மேலும், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. ஏஐ கேமரா பீச்சர்களை பார்க்கையில் ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ ரெப்ளெக்சன் ரீமூவர் (AI Reflection Remover), ஏஐ லேண்ட்கேப் 2.0 (AI Landscape 2.0) மற்றும் ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி (AI Ultra Clarity) கிடைக்கின்றன. IP64 ரேட்டிங் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் இந்த ரியல்மி போனுக்கு கிடைக்கிறது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient light sensor) கிடைக்கிறது. மேட் சில்வர் (Matte Sliver), எலிகன்ட் பிங்க் (Elegant Pink) மற்றும் லேக் கிரீன் (Lake Green) ஆகிய கலர்களில் இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications