65-இன்ச் TV மீது 67% தள்ளுபடி.. 50W ஸ்பீக்கர் உடன் இனி வீட்டுக்கு உள்ளேயே தியேட்டர்.. Flipkart நீ வாழ்க!
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடந்து கொண்டிருக்கும் சாசா லேலே 2026 விற்பனையின் (Flipkart SASA LELE 2026 Sale) ஒரு பகுதியாக 65 இன்ச் ஸ்மார்ட் டிவி (65 inch Smart TV) மாடல் ஒன்றின் மீது 67% டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அது 65-இன்ச் ஏசர் நைட்ரோ க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Acer Nitro 164 cm (65 inch) QLED Ultra HD 4K Smart Google TV) மாடல் ஆகும். அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன முக்கிய அம்சங்கள்? வேறு என்னென்ன 65 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

அசல் விலை VS ஆபர் விலை: பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது ஏசர் நிறுவனத்தின் இந்த 65-இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் ரூ.36,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது எம்ஆர்பி விலையான ரூ.1,10,990 இல் இருந்து ரூ.73,991 நேரடி விலை குறைப்பு அல்லது 67% நேரடி தள்ளுபடி விலை ஆகும்.
எக்ஸ்ட்ரா ஆபர்கள்: மேலும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு மற்றும் பிளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டு கொண்டு வாங்கினால் கூடுதலாக ரூ.2600 தள்ளுபடி கிடைக்கும் அல்லது எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.1500 கிடைக்கும் அலல்து பிளிப்கார்ட் ஆக்சிஸ் டெபிட் கார்டு கொண்டு வாங்கினால் கூடுதலாக ரூ.750 தள்ளுபடி கிடைக்கும் என்றும் பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ஜிடிவி 5.0 ஆதரவு கொண்ட 65 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவையும் கொண்டுள்ளது. சவுண்டை பொறுத்தவரை 2 ஸ்பீக்கர்கள் வழியாக 50W ஸ்பீக்கர் அவுட்புட் ஆர்எம்எஸ்-ஐ வழங்குகிறது.
ஆப்ரேட்டிங் சிஸ்டமை பொறுத்தவரை இதன் மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே கூகுள் டிவி ஓஎஸ் (Google TV Operating System) கொண்டு இயங்குகிறது. ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டர்னல் மெமரியை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள் மற்றும் பில்ட்இன் வைஃபை ஆதரவை வழங்குகிறது
வேறு என்னென்ன 65-இன்ச் டிவிகள் மீது ஆபர் கிடைக்கிறது? 50W ஸ்பீக்கர், 120ஹெர்ட்ஸ் கேம் ஆக்சிலரேட்டர் மற்றும் டால்பி அட்மாஸ் அம்சங்களுடன் வரும் மோட்டோரோலா 65 இன்ச் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (Motorola 65 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition) மீதும் ஆபர் கிடைக்கிறது.
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த 65-இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் ரூ.42,999 க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. இது எம்ஆர்பி விலையான ரூ.88,399 இல் இருந்து ரூ.45,400 நேரடி விலை குறைப்பு அல்லது 51% நேரடி தள்ளுபடி விலை ஆகும்.
இதேபோல MEMC ஆதரவு, டால்பி விஷன்-அட்மாஸ், எச்விஏ பேனல் மற்றும் மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைன் உடன் வரும் ஐஃபால்கான் யு65 65-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (iFFALCON U65 65 inch Ultra HD 4K LED Smart Google TV) மாடலும் நல்ல தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது ஐஃபால்கான் நிறுவனத்தின் இந்த 65-இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் ரூ.34,499 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது எம்ஆர்பி விலையான ரூ.1,20,990 இல் இருந்து ரூ.86,491 நேரடி விலை குறைப்பு அல்லது 71% நேரடி தள்ளுபடி விலை ஆகும்.


Click it and Unblock the Notifications