Home
Deal of the day

வீடே தியேட்டர் தான்: பாதி விலையில் 4K Smart TV வாங்கலாம்.. ரூ.10,999 முதல் எச்டி ரெடி ஸ்மார்ட்டிவிகள்!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையானது அக்டோபர் 23 உடன் முடிவடைகிறது. இந்த தினங்களில் பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக ஸ்மார்ட்டிவிகள் 56% வரை தள்ளுபடியுடன் அமேசானில் கிடைக்கிறது. சிறந்த அம்சங்கள் கொண்ட புதிய ஸ்மார்ட்டிவிகள் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

வீடே தியேட்டர் தான்: பாதி விலையில் 4K Smart TV வாங்கலாம்..

வீட்டில் பிரதான பயன்பாடாக இருக்கும் ஸ்மார்ட்டிவிகளை சிறந்த தள்ளுபடியுடன் வாங்கலாம். ரெட்மி, ஒன்பிளஸ், சாம்சங், எம்ஐ உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஸ்மார்ட்டிவிகள் அதீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. நீங்கள் புது ஸ்மார்ட்டிவி வாங்க திட்டமிட்டிருந்தாலோ அல்லது பழைய ஸ்மார்ட்டிவியை மேம்படுத்த திட்டமிட்டிருந்தாலோ இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

அமேசானில் சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் ஸ்மார்ட்டிவிகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் தள்ளுபடி விலையுடன் கூடுதலாக வங்கி சலுகைகளும் கிடைக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சிட்டி பேங்க், ஐசிஐசிஐ மற்றும் கோடக் பேங்க்கள் மூலம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு உடனடி 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் கிடைக்கிறது. சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் ஸ்மார்ட்டிவிகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ரெட்மி 32 இன்ச் ஸ்மார்ட்டிவி

ரூ.24,999 என்ற விலையில் விற்கப்பட்ட ரெட்மி 32 இன்ச் ஸ்மார்ட் டிவியானது தற்போது ரூ.10,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது அமேசானில் 56% தள்ளுபடி உடன் கிடைக்கிறது. இந்த சலுகை இன்னும் நான்கு நாட்களில் முடிவடைகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

எச்டி ரெடி எல்இடி டிஸ்ப்ளே இந்த ஸ்மார்ட்டிவியில் பொருத்தப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற பல ஸ்ட்ரீமிங் தள அணுகல் இதில் வழங்கப்பட்டுள்ளது. பக்கா ஆண்ட்ராய்ட் டிவி அம்சங்களை இதில் உணரலாம்.

ஒன்பிளஸ் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி

ஒன்பிளஸ் 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது அமேசானில் 40% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.19,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.11,999 என கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்டிவியில் 32 இன்ச் அளவுள்ள எச்டி ரெடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 60 ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது இதன் டிஸ்ப்ளே. நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற ஸ்ட்ரீமிங் தள ஆதரவுகளும் வழங்கப்பட்டிருக்கிறது. கேமிங் கன்சோல், ப்ளூரே ப்ளேயர்கள், 2 யூஎஸ்பி போர்ட்கள் என பல ஆதரவுகள் இருக்கிறது.

சாம்சங் 32 இன்ச் ஸ்மார்ட்டிவி

சாம்சங் 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட்டிவியானது அமேசானில் ரூ.13,490 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியின் நிர்ணய விலை ரூ.22,900 ஆகும். தற்போது அமேசானில் இந்த ஸ்மார்ட்டிவிக்கு 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது இன்னும் 4 நாட்களில் முடிவடைகிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் இந்த ஸ்மார்ட்டிவிக்கு வழங்கப்படுகிறது.

32 இன்ச் எச்டி ரெடி எல்இடி டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 768 பிக்சல் தீரமானத்துடன் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, சோனிலைவ், யூடியூப், ஹாட்ஸ்டார் என பல ஓடிடி அணுகல் வழங்கப்படுகிறது. Wondertainment Series இல் இந்த ஸ்மார்ட்டிவி விற்கப்படுகிறது.

எம்ஐ 32 இன்ச் 5ஏ சீரிஸ் ஸ்மார்ட்டிவி

எம்ஐ 32 இன்ச் 5ஏ சீரிஸ் ஸ்மார்ட்டிவி ஆனது ரூ.24,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.12,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு அமேசானில் 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், யூடியூப் என பல ஸ்ட்ரீமிங் தள ஆதரவுகள் வழங்கப்பட்டுள்ளது.

32 இன்ச் எல்இடி டிவி டிஸ்ப்ளே ஆனது 720 பிக்சல் தீர்மானத்துடன் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. டால்பி தர ஆடியோ ஆதரவுடன் டிடிஎஸ் விர்ச்சுவல் எச்டி வெளியீட்டு தன்மை கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்டிவி இயக்கப்படுகிறது.

ஹைசென்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி

இது ப்ரீமியம் தர ஸ்மார்ட்டிவியாகும். ஹைசென்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியானது ரூ.44,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இது ரூ.26,990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுக்கிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் வழங்கப்படுகிறது.

4கே தர 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது கூகுள் டிவி ஆகும். அனைத்து ஓடிடி ஸ்ட்ரீமிங் தள ஆதரவும் இருக்கிறது. குறிப்பிடத்தக்க பல்வேறு மேம்பாட்டு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்டிவியில் இருக்கிறது.

English summary
4K Smart TVs Available at half off Price on Amazon: Right time to Buy New Smart TV
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X