அடிச்சு தூக்குது ஆர்டர்.. பட்ஜெட்ல BYBASS சார்ஜிங்.. 8000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு சரியான நேரம் வந்துவிட்டது. 8000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், பைபாஸ் சார்ஜிங் மற்றும் 7 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் வாரண்டி கொண்ட ரியல்மி 16டி ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 16டி ஸ்மார்ட்போனுக்கு 45 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.27,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,400 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலையில் இந்த ரியல்மி 16டி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

ரியல்மி 16டி அம்சங்கள் (Realme 16T Specifications): 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த ரியல்மி 16டி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 975 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 254 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இந்த ரியல்மி 16டி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் மட்டுமல்லாமல், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் பேக் செய்யப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோகுரோம் கேமராவை இந்த ரியல்மி 16டி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சார் கிடைக்கிறது. 1080p 60FPS வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சாருடன் 16 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ரியல்மி 16டி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இதிலும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. லுமாகலர் இமேஜ் என்ஜின் (LumaColor IMAGE Engine), ஏஐ போர்ட்ராய்டு குளோவ் (AI Portrait Glow) கிடைக்கிறது. இதில் ரிம் லைட் (Rim Light), நேச்சுரல் லைட் (Natural Light) மற்றும் ஸ்டூடியோ லைட் (Studio Light) வருகிறது.
ஏஐ பாப்அவுட் கோலாஜ் (AI Popout Collage) மற்றும் ஏஐ ஸ்டைல்மீ (AI StyleMe) உள்ளிட்ட கேமரா பீச்சர்களும் கிடைக்கின்றன. 45W ஃபாஸ்ட் சார்ஜிங், பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) மற்றும் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் (Wired Reverse Charging) சப்போர்ட் கிடைக்கிறது. 7 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் கிடைக்கிறது. இந்த பீச்சர்களுடன் 8000mAh பேட்டரி கிடைக்கிறது.
இந்த பேட்டரியுடன் 8.88 எம்எம் தடிமன் வருகிறது. மேலும், 224 கிராம் எடை கொடுத்துள்ளது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ப்ரோ ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த ரியல்மி 16டி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. MIL-STD 810H சர்டிபிகேஷன் மிலிட்டரி கிரேடு ப்ரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications