இதுதான் ஆஃபர்.. 16ஜிபி மெமரி.. டால்பி ஆடியோ.. குறைந்த விலையில் 43 இன்ச் டிவி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் Great Indian Festival எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தரமான 43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவிக்கு (Acer I Pro Series Full HD Smart LED Google TV) தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி 30W ஸ்பீக்கர்கள், 16ஜபி மெமரி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் 43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 55 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.18499 விலையில் வாங்கிவிட முடியும்.

43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள்: ஃபுல் எச்டி டிஸ்பிளே உடன் இந்த ஏசர் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர் 10 போன்ற பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டிவி.
அதேபோல் குவாட் கோர் பிராசஸர் (Quad Core Processor) உடன் இந்த டிவி அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே பல்வேறு புதிய அம்சங்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.
43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவியில் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல்வேறு ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம். அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி பல சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன.
குறிப்பாக 1.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது இந்த 43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் வசதி மற்றும் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ்,டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், யூடியூப் போன்றவற்றின் ஷார்ட்கட் பட்டன்கள் இந்த ரிமோட்டில் உள்ளன.

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட் 30W ஸ்பீகர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான 43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் ஸ்டேடியம் (Stadium), ஸ்டாண்டர்ட் (Standard), மூவி (Movie), மியூசிக் (Music)போன்ற ஆடியோ அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.
கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த டிவியில் உள்ளன. மேலும் எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), 1 டிஜிட்டல் ஆடியோ அவுட்புட் (Digital Audio Output), டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications