Home
Deal of the day

ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.17,999 மதிப்புள்ள 5G போன் இப்போ ரூ.10,749 க்கு.. கூடவே 45W சார்ஜர் இலவசம்.. எந்த மாடல்?

ரூ.18,000 பட்ஜெட்டில் அறிமுகமான ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.10,000 பட்ஜெட்டில் வாங்கும் வாய்ப்பை அமேசான் இந்தியா வழங்குகிறது. "அட இது நல்ல ஆபரா இருக்கே!" என்று தோன்றினால்.. 2025 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரை மட்டுமே உங்களுக்கு டைம்!

ஏனென்றால் அன்றோடு தான் அமேசான் வலைதளத்தில் நடக்கும் ஹாலிடே போன் ஃபெஸ்ட் விற்பனை முடிவடைகிறது. இந்த விற்பனையின் போது, ரூ.17,999 என்கிற எம்ஆர்பி விலையின் கீழ் அறிமுகமான ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வெறும் ரூ.10,749 க்கு வாங்க கிடைக்கும்.

ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.17,999 மதிப்புள்ள 5G போன் இப்போ ரூ.10,749 க்கு!

அதாவது ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீது 40% நேரடி தள்ளுபடி அல்லது ரூ7,250 விலை குறைப்பு கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இது கடந்த 2024 ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகமானது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி 9 மாதங்கள் மட்டுமே ஆகிறது. ஆகையால் இதை மிகவும் பழைய ஸ்மார்ட்போன் என்கிற வர்மப்பிற்குள்ளும் கொண்டு செல்ல முடியாது.

போதாக்குறைக்கு பல நிறுவனங்கள் தத்தம் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர்களை பேக் செய்வதை நிறுத்திவிட்டு, அதை தனியாக பணம் செலுத்தி வாங்குமாறு கேட்டுக்கொள்கின்றன. ரியல்மி நிறுவனம் அந்த போக்கை இன்னும் பின்பற்ற தொடங்கவில்லை என்பதால், ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் 45W சார்ஜர் இடம்பெறுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி-யின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (1080 x 2400 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், 6ஜிபி வரை ரேம், டைனமிக் ரேம் அம்சம், 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 8எம்பி செல்பீ கேமரா, 45W சூப்பர்வூக் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

அமேசான் ஹாலிடே போன் ஃபெஸ்ட் விற்பனையில் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது? ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) ரூ.11,999 க்கு பதிலாக ரூ.9,498 க்கு வாங்க கிடைக்கிறது. ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G) .14,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.

லாவா பிளேஸ் டூயோ 5ஜி (Lava Blaze Duo 5G) ரூ.20,499 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 5ஜி (OnePlus Nord CE4 5G) ரூ.24,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஐக்யூ 13 5ஜி (iQOO 13 5G) ரூ.61,999 க்கு பதிலாக ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) ரூ.21,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S23 Ultra 5G) ரூ.1,49,999 க்கு பதிலாக ரூ.72,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஹானர் 200 5ஜி (Honor 200 5G) ரூ.39,999 க்கு பதிலாக ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது.

எச்எம்டி பியூஷன் 5ஜி (HMD Fusion 5G) ரூ.22,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி (OnePlus 12R 5G) ரூ.42,999 க்கு பதிலாக ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி ஜிடி 7 ப்ரோ 5ஜி (Realme GT 7 Pro 5G) ரூ.69,999 க்கு பதிலாக ரூ.59,998 க்கு வாங்க கிடைக்கிறது. போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G) ரூ.16,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.

English summary
40 Percent Discount on Realme NARZO 70x 5G Buy For Juts Rs 10749 Instead of Rs 17999 in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X