வச்சிக்கோ.. ரூ.10,500 டிஸ்கவுண்ட்.. Amazon-ல் அடிச்சு புடிச்சு வாங்கப்படும் Samsung 5G போன்.. என்ன மாடல்?
அமேசான் வலைத்தளத்தில் நடக்கும் தீபாவளி சிறப்பு விற்பனையின் (Amazon Diwali Sale 2024) ஒரு பகுதியாக சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் (Samsung 5G Smartphone) ஒன்றின் மீது 39% நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முழுதாக ரூ.10,500 விலை குறைக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? அதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? 39% டிஸ்கவுன்ட் விலையின் கீழ் விற்பனை செய்யப்படுவது சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G) ஸ்மார்ட்போன் தான். தற்போது இது அமேசானில் ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது. பேங்க் ஆபரை பயன்படுத்தினால் ரூ.13,999 க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் அசல் எம்ஆர்பி ரூ.24,499 ஆகும். அதாவது முன்னாடி குறிப்பிட்டபடி இது ரூ.9,500 முதல் ரூ.10,500 வரையிலான தள்ளுபடியை பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (1000 nits peak brightness) உடனான 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளேவை (Super AMOLED Infinity-O Display) கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது மாலி-ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) உடனாக ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octacore Exynos 1380) சிப்செட்டை பேக் செய்கிறது. 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என்கிற 2 வேரியண்ட்களில் வரும் இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 14 ஆப்ரேட்டிங் சிஸ்டம் (Android 14 OS) அடிப்படையிலான ஒன் யுஐ (OneUI) கொண்டு இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை இது 50 எம்பி ப்ரைமரி கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, முன்பக்கத்தில் 13 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன் ஆனது 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது,. மேலும் இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (25W fast charging) ஆதரவையும் கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
கூடவே சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு உடனான ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.14,999 என்கிற ஆபர் விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது "கண்களை மூடிக்கொண்டு" நம்பி வாங்க கூடிய, தரமான அம்சங்களை கொண்ட ஒரு 5ஜி ஸ்மார்ட்போனாக உள்ளது!
அமேசான் தீபாவளி விற்பனையில் வேறு என்னென்ன சாம்சங் போன்கள் மீது பெரிய அளவிலான தள்ளுபடி கிடைக்கிறது? சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி (Samsaung Galaxy S24 Ultra 5G) ஆனது ரூ.1,49,999 க்கு பதிலாக ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G) ரூ.15,999 க்கு பதிலாக (பேங்க் ஆபர் உடன் சேர்த்து) ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.
மேலும் சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி (Samsung Galaxy M55s 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.28,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்24 5ஜி (Samsung Galaxy S24 5G) மாடல் ஆனது ரூ.74,999 க்கு பதிலாக (பேங்க் ஆபர் உடன் சேர்த்து) ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி (Samsung Galaxy A35 5G) மாடல் ஆனது ரூ.24,499 க்கு பதிலாக (பேங்க் ஆபர் உடன் சேர்த்து) ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications