2024 தீபாவளிக்காக பாதி விலை.. கொரில்லா டிஸ்பிளே, 16GB ரேம், 5000mAh பேட்டரி, 5ஜி.. Amazon-ல் ஆர்டர் பறக்குது!
2024 தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு அமேசான் வலைதளத்தில் நடக்கும் சிறப்பு விற்பனையின் (Amazon Great Indian Festival Diwali Special 2024 Sale) ஒரு பகுதியாக.. ரெட்மி நிறுவனத்தின் ஒரு தரமான 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது 38% நேரடி தள்ளுபடி (கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலை) அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். தற்போது இது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் தீபாவளி ஸ்பெஷல் சேலின் ஒரு பகுதியாக 38% தள்ளுபடியை பெற்று ரூ.13,999 க்கு பதிலாக ரூ.8,749 க்கு வாங்க கிடைக்கிறது.

மிகவும் மலிவாக இருக்கிறதே இந்த ரெட்மி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இந்த கேள்வி அல்லது குழப்பம் உங்களிடம் இருந்தால்.. தற்போது ரூ.9,000 குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்குவதற்கான 5 காரணங்கள் இதோ:
01. விலையை மீறிய டிசைன்: ரெட்மி 13சி 5ஜி டக்கென்று ஈர்க்கும் பேக் பேனல் டிசைனை கொண்டுள்ளது. ஒளி படும்போதும் - பச்சை மஞ்சள் நிறத்தின் பல்வேறு ஷேட்களில் - பளபளப்பான வடிவங்களையும், விளைவையும் உருவாக்குகிறது. கூடவே இதன் பேக் பேனல் நேர்த்தியான தோற்றத்தையும் பெற்றுள்ளது. எல்லாவற்றை விட முக்கியமாக இது மெலிதான மற்றும் இலகுரக வடிவமைப்பை பெற்றுள்ளது.
02. தேவைகளை பூர்த்தி செய்யும் பேட்டரி: ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. வழக்கமான பயன்பாட்டின் போது பெரும்பாலும் இது முழு நாளுக்கும் நீடிக்கிறது. கூடவே இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்டுள்ளது. இருப்பினும் ரீடெயில் பாக்ஸில் உள்ள சார்ஜர் 10W திறனுடன் வருகிறது.
03. திருப்திகரமான பெர்ஃபார்மென்ஸ்: ரெட்மி 13சி 5ஜி போனின் ஒட்டுமொத்த செயல்திறன் திருப்திகரமாக உள்ளது. சோஷியல் மீடியா ஆப்களை ஸ்க்ரோலிங் செய்தல், வாட்ஸ்அப்பில் சாட் செய்தல் மற்றும் வீடியோக்களை பார்ப்பது போன்ற அடிப்படை பணிகளில் எந்த பிரச்சினையும் இருக்காது. சப்வே சர்ஃபர்ஸ் போன்ற சாதாரண கேம்களில் எந்த சிக்கலும் இருக்காது
04. நல்ல லைட்டிங்கில் நல்ல அவுட்புட்களை வழங்கும் கேமரா: ரெட்மி 13சி 5ஜி மாடலில் சிறந்த, ஆல்-ரவுண்ட் கேமரா செட்டப் உள்ளது என்று கூற முடியாது. மாறாக சரியான வெளிச்சத்தில் போதுமான அளவு வேலை செய்யும் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது என்று கூறலாம். இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது. இது நல்ல லைட்டிங்கில் விரிவான மற்றும் வண்ணமயமான காட்சிகளை வழங்குகிறது.
05. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பெரிய டிஸ்பிளே: ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனில் 6.74-இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்பிளே (LCD Display) உள்ளது. சுவாரசியமாக இது 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை (600 nits Peak Brightness) வழங்குகிறது.இந்த விலைப்பிரிவில் இதுவொரு அசாதாரணமான அம்சமாகும்.
கூடவே இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடன் வருகிறது. ஒப்பீட்டளவில் இது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate) டிஸ்பிளேவை விட ஸ்மூத் ஆன விட ஸ்க்ரோலிங் மற்றும் நேவிகேட்டிங் அனுபவத்தை (Smooth scrolling and navigating experience) வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் தீபாவளி ஸ்பெஷல் சேலின் கீழ் ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் மீது மட்டுமின்றி.. ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G), ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G), ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus), ஷாவ்மீ 14 (Xiaomi 14) ஆகிய ஸ்மார்ட்போன்கள் மீது நேரடி தள்ளுபடி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications