Home
Deal of the day

முழுசா ரூ.9501 டிஸ்கவுண்ட்.. இனி இந்த Realme 5G போனின் விலை ரூ.25,000 இல்ல.. ரூ.15000 தான்.. எந்த மாடல்?

ஏர் கெஸ்சர்ஸ் (Air Gestures) எனப்படும் கை அசைவுகளால் கண்ட்ரோல் ஆகும் அம்சங்களுடன் அறிமுகமாகி, இந்திய மொபைல் மார்க்கெட்டை திரும்பி பார்க்கவைத்த ஒரு ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன், தற்போது ரூ.9,501 என்கிற நேரடி தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. அதென்ன மாடல்? அதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது? தற்போது இதை நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:

அதென்ன மாடல்? ரூ.9,501 டிஸ்கவுன்ட்டை பெற்றுள்ளது ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme Narzo 70 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆகும். கடந்த 2024 மார்ச் மாதத்தில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக 38% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.15,498 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி விலை ரூ.24,999 ஆகும்.

இனி இந்த Realme 5G போனின் விலை ரூ.25,000 இல்ல.. ரூ.15000 தான்!

ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன முக்கிய அம்சங்கள் உள்ளன? இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (Octa-core Mediatek Dimensity 7050 Chipset) மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் (Virtual RAM feature) கீழ் 16ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.1 (RealmeUI 5.1) உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) ஆதரவு உடனான 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமராவை பேக் செய்கிறது. கடைசியாக இது 67W வயர்டு சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்கிற்கான (SuperVOOC Fast Charging) ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

மார்ச் 2024 இல் அறிமுகமான ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? அறிமுகமான வேகத்திலேயே ரூ.20,000 பட்ஜெட்டில் கிடைக்கும் பெஸ்ட் போன்களில் (Best Phone Under Rs.20,000) ஒன்றாக மாறிய இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.15,0000 பட்ஜெட்டில் கிடைப்பது, உண்மையிலேயே ஒரு நல்ல டீல் தான்.

ஏனென்றால் இது விலையை மீறிய வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் டூயல் டோன் பினிஷ் உடன் நேர்த்தியான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பை கொண்டுள்ளது. கூடவே பளபளப்பான பாலிகார்பனேட் ஃபிரேம் மற்றும் மெட்டாலிக் பாலிஷ் உடனான ஸ்டீல் பினிஷ் உடன் வருகிறது. இது கிளாஸ் கிரீன் மற்றும் கிளாஸ் கோல்டு கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.

மேலும் இது நல்ல லோ லைட்டிங் போட்டோகிராஃபியை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மெயின் ரியர் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் உள்ளது. இந்த சென்சார் ரூ.20,000 க்குள் என்கிற பிரிவில் ஒரு கேம் சேஞ்சிங் அம்சமாகும். இந்த சென்சார், மங்கலான வெளிச்சத்தில் கூட தெளிவான மற்றும் விரிவான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டது.

கடைசியாக மற்றும் முக்கியமாக (முன்னரே குறிப்பிட்டபடி) இது ஏர் கெஸ்சர்ஸ் அம்சங்களுடன் வருகிறது. இந்த ஏர் கெஸ்சர்ஸ் அம்சங்கள் ஆனது "சாதாரண ஸ்மார்ட்போன் அனுபவத்திற்கு" அப்பால் உங்களை கொண்டு செல்லும். இன்னும் சோதனை நிலையில் உள்ள இந்த புதிய அம்சம், ஸ்க்ரீனை தொடாமலேயே, கை சைகைகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போனின் சில செயல்பாடுகளை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.

English summary
38 Percent Discount on Realme Narzo 70 Pro 5G in Amazon Buy This 5G Phone For Rs 15498
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X