Home
Deal of the day

அடிச்சு புடிச்சு வாங்குவீங்க.. பட்ஜெட்ல 11.5 டிஸ்பிளே.. ஆட்டோ போகஸ் கேமரா.. 8600mAh பேட்டரி.. எந்த மாடல்?

10 இன்ச் போதாது, அதற்கு மேல இருக்க டேப்லெட் வேண்டும், அதுவும் பட்ஜெட்ல இருக்கனும் என்று கேட்கும் டேப்லெட் பிரியர்களுக்கு 11.5 இன்ச் டிஸ்பிளே மட்டுமல்லாமல், ஆட்டோ போகஸ் மற்றும் ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கும் கேமரா, டால்பி அட்மோஸ் மற்றும் ஜேபிஎல் ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி ஜி99 சிப்செட் போன்ற எதிர்பார்க்காத பீச்சர்களுடன் லெனோவா டேப் பிளஸ் (Lenovo Tab Plus) கிடைக்கிறது. இப்போது டிஸ்கவுண்ட்டில் வந்து, விற்பனையில் பின்னி எடுக்கிறது.

ஓடிடி மற்றும் ஆப்லைன் வீடியோவை பிரீமியம் ரெசொலூஷன் மற்றும் குவாலிட்டியில் பாக்கும்படி இந்த லெனோவா டேப் பிளஸ் பீச்சர்களை கொடுக்கிறது. இன்-பில்ட் கிக் ஸ்டாண்ட் (In-built Kickstand), ஸ்பீக்கர் பம்ப் (Speaker Bump) போன்ற பாடி டிசைனுடன் பக்கா எண்டர்டெயின்மெண்ட் மாடலாக கிடைக்கிறது. இப்போது முழு பீச்சர்களையும் தெரிந்து கொள்வோம்.

அடிச்சு புடிச்சு வாங்குவீங்க.. பட்ஜெட்ல 11.5 டிஸ்பிளே.. ஆட்டோ போகஸ்!

லெனோவா டேப் பிளஸ் அம்சங்கள் (Lenovo Tab Plus Specifications): இந்த லெனோவா டேப்லெட்டில் 11.5 இன்ச் (2000 x 1200 பிக்சல்கல்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. ஆகவே, வீடியோ அனுபவம் லேப்டாப் மாடல்களுக்கு நிகராக இருக்கும். 2K ரெசொலூஷனில் வீடியோ அவுட்புட் கிடைக்கும். 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

175 டிகிரியில் கிக்ஸ்டாண்ட் பயன்படுத்தலாம், சார்ஜிங்குடன் கிக்ஸ்டாண்ட் கிடைப்பதால், ஹேண்டில் செய்ய ஈஸியாக இருக்கும். இந்த டிஸ்பிளே பீச்சர்களுக்கு ஏற்ப டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர் சிஸ்டம் கிடைக்கிறது. நான்கு பக்கமும் ஜேபிஎல் (JBL) ஸ்பீக்கர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன.

இதில் 2 ட்வீடர்கள் மற்றும் 2 பேஸ் அவுட்புட் ஸ்பீக்கர்கள் வருவதால், ஆடியோ அனுபவம் பிரீமியமாக இருக்கும். ப்ளூடூத் ஸ்பீக்கர் கனெக்டிவிட்டி மற்றும் கஸ்டமைசபிள் சவுண்ட் செட்டிங்ஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மொபைல்களை போல 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. இந்த டேப் பிளஸ் மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

இதுவொரு வை-பை கனெக்டிவிட்டி கொண்ட டேப்லெட் மாடலாகும். இருப்பினும், அவுட்புட் பட்டையை கிளப்பும்படி இருக்க 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி699 எஸ்ஓசி (6nm Octa Core MediaTek Helio G99 SoC) கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 2 வேரியண்ட்கள் இந்த டேப்லெட்டில் உள்ளன.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொடுக்கும் வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொடுக்கும் வேரியண்ட் ஆகியவற்றை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த 2 மெமரி மாடல்களிலும் 1 டிபி மெமரிக்கு மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஸ்பீக்கர்கள், ஆடியோ ஜாக், டைப்-சி போர்ட் ஆகியவற்றுடன் எஸ்டிகார்டு சிலாட் வருகிறது.

ஆட்டோபோகஸ் மற்றும் ஃபுல்எச்டி ரெக்கார்டிங் கொண்ட 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 8600mAh பேட்டரி கிடைக்கிறது. லூனா கிரே (Luna Grey) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதன் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. அமேசான் விற்பனையில் ரூ.3000 டிஸ்கவுண்ட் போக வாங்க கிடைக்கிறது.

English summary
35 Percent Discount on Lenovo Tab Plus With 8GB RAM 8600mAh Battery in Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X