விட்றாதீங்க எப்போ.. ரூ.7999 க்கு 8GB ரேம், 1TB மெமரி, 5000mAh பேட்டரி, 6.5-இன்ச் டிஸ்பிளே.. எந்த மாடல்?
சூப்பர்-பட்ஜெட் விலைக்கு அறிமுகமானாலே.. அதாவது ரூ.10,000-க்குள் அறிமுகமானாலே.. அந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களில் சில சமரசம் செய்யவேண்டி இருக்கும் என்கிற போக்கு இன்னமும் நிலவுகிறது. அந்த போக்கை அப்படியே மாற்றும்படியான ஒரு சாம்சங் ஸ்மார்ட்போன் தற்போது 33% தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதென்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள் ? நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி எம்04 (Samsung Galaxy M04) மாடலாகும். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகி இருந்தாலும் கூட.. ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் சாம்சங் கேலக்ஸி எம்04 மாடல் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் (முன்னரே குறிப்பிட்டபடி) இதன் அம்சங்களில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை!

அசல் விலை VS ஆபர் விலை: சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போன் ஆனது தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது எம்ஆர்பி விலையான ரூ.11,999 இல் இருந்து 33% நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது. இது மட்டுமின்றி 10% வங்கி தள்ளுபடி, ரூ.400 க்கும் குறைவான இஎம்ஐ விருப்பங்கள் போன்ற சலுகைகளும் அமேசான் இந்தியா வலைதளத்தில் கிடைக்கிறது
2 வருட பழைய மாடலான சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போனை இப்போது நம்பு வாங்கலாமா? ஆம்!கண்டிப்பாக வாங்கலாம் என்பதற்கான 4 காரணங்களை முன் வைக்க முடியும். முதலாவதாக - இந்த ஸ்மார்ட்போனில் ரேம் பிளஸ் (RAM Plus) என்கிற அம்சம் உள்ளது.
இதன் மூலம் ரூ.8000 க்குள் வாங்க கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போனில் 8ஜிபி அளவிலான ரேம்-ஐ பெற முடியும். அறியாதோர்களுக்கு ரேம் பிளஸ் என்பது இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து சில ஜிபிகளை "கடன் வாங்கி" அதை ரேம் ஆக பயன்படுத்த உதவும் அம்சம் ஆகும்.
இரண்டாவதாக சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போனின் இன்டர்னல் ஸ்டோரேஜும் பெரிதாக உள்ளது. இது 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவுடன் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மூன்றாவதாக இந்த ஸ்மார்ட்போனிற்கு அறிமுகமாகும் போதே 2 வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அதாவது இன்னும் 2 ஆண்டுகள் ஆனாலும் கூட சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கான செக்யூரிட்டி அப்டேட்களை வழங்கி, இந்த ஸ்மார்ட்போனின் வேகத்தை தொடர்ந்து அதிகரிக்க உதவும், அது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு இந்த போனின் செயல்திறனையும் மேம்படுத்தும். ரூ.10000 க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன் என்றால் அதை 1 வருடத்திற்கு பயன்படுத்தினாலே போதும் என்கிற பேச்சு, இந்த ஸ்மார்ட்போனிடம் செல்லுபடி ஆகாது!
நான்காவதாக சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போன் ஆனது 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. நிறைய ஸ்மார்ட்போன்களில் 5000mAh பேட்டரி இடம்பெறுகிறது தான் என்றாலும் கூட, இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் உடன் சேர்ந்த 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆக இந்த ஸ்மார்ட்போனின் பெர்ஃபார்மென்ஸில் பெரிய அளவிலான குறைகளை கண்டுபிடிக்க முடியாது!
ஒட்டுமொத்தமாக.. சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போனை பட்ஜெட்-விலையில் கிடைக்கும் ஒரு நல்ல ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போன் என்றே கூறலாம். இந்த ஸ்மார்ட்போனின் மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 6.5 இன்ச் அளவிலான எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 13எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 5எம்பி செல்பீ கேமரா போன்றவைகளை கொண்டுள்ளது. அமேசான் இந்தியாவில் சீ கிளாஸ் க்ரீன் மற்றும் ஷேடோ ப்ளூ என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ், மேற்கண்ட தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது!


Click it and Unblock the Notifications