வெளுத்து கட்டும் விற்பனை.. மட்ட ரேட்ல 32 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. HDR டிஸ்பிளே.. ஃபயர் TV OS.. எந்த மாடல்?
32 இன்ச் டிவி வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு அமேசான் தளத்தில் பக்காவான நேரம் வந்துவிட்டது. 32 இன்ச் சியோமி எப் சீரிஸ் எல்இடி ஃபயர் டிவி (32 inch Xiaomi F Series LED Fire TV) மாடலானது கிட்டத்தட்ட பாதி விலைக்கு கிடைக்கிறது. பட்ஜெட்டில் டால்பி ஆடியோ, எச்டிஆர் சப்போர்ட் கொடுத்து இருக்கிறது. இந்த எப் சீரிஸ் மாடலின் முழு விரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அமேசான் தளத்தில் 48 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.12,999 விலைக்கு இந்த 32 இன்ச் சியோமி எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி (32 inch Xiaomi F Series HD Ready Smart LED Fire TV) மாடல் கிடைக்கிறது. இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி மற்றும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, மேலும் மலிவாக வாங்கலாம்.

இந்த விலையில் பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) கிடைப்பதால், பிரீமியம் லுக் மற்றும் வியூவிங் கிடைக்கிறது. பில்ட்-இன் ஸ்பீக்கர் (Built-In Speaker), குரோம்காஸ்ட் (Chromecast) கிடைக்கிறது. மேலும், ஐ கம்போர்ட் மோட் (Eye Comfort Mode), வைடு வியூவிங் ஆங்கிள் (Wide Viewing Angle) கொண்ட மாடலாக இந்த 32 இன்ச் சியோமி எப் சீரிஸ் எல்இடி ஃபயர் டிவி கிடைக்கிறது.
32 இன்ச் சியோமி எப் சீரிஸ் எல்இடி ஃபயர் டிவி அம்சங்கள் (32 inch Xiaomi F Series LED Fire TV Specifications): ஃபயர் டிவி பில்ட்-இன் (Fire TV Built-In) கிடைக்கிறது. இருப்பினும், பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்களுடன் 12000+ ஆப்களின் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த 32 இன்ச் சியோமி எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி இருக்கிறது. டிடிஎச் செட்-டாப் பாக்ஸ் இன்டிகிரேஷன் கிடைக்கிறது. 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 720p எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டில் எச்டிஆர் (HDR), எச்எல்ஜி (HLG) மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) போன்ற டிஸ்பிளே பீச்சர்களையும் இந்த 32 இன்ச் சியோமி எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி கொடுத்து இருக்கிறது. அதேபோல ஆடியோவிலும் குறை சொல்லிவிட முடியாது. 20W ஆடியோ அவுட்புட் மற்றும் டால்பி ஆடியோ (Dolby Audio) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், டிடிஎஸ் - எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் : எக்ஸ் (DTS Virtual : X) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 2 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூஎஸ்பி போர்ட்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இதுபோக ப்ளூடூத் (Bluetooth) மற்றும் பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) கனெக்டிவிட்டியை இந்த 32 இன்ச் சியோமி எப் சீரிஸ் எல்இடி ஃபயர் டிவி கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
