ரூ.10,500 போதுமே: அமேசான் சலுகை தின விற்பனை- அட்டகாச தள்ளுபடியுடன் 32 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்!
ஸ்மார்ட்டிவிகள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஓடிடி ஸ்ட்ரீமிங் அணுகல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஸ்மார்ட் டிவி பயன்பாடு என்பது பிரதானமாக இருக்கிறது. ஒரு வீடு முழுமை அடைகிறது என்ற சொல்லில் பிரதானமாக உட்படுகிறது இந்த ஸ்மார்ட்டிவி. ஸ்மார்ட்டிவிகளை பல்வேறு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு விலைப்பிரிவில் புதுப்புது அம்சங்களோடு அறிமுகம் செய்து வருகின்றன.

இஏர்டெக் 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி
இஏர்டெக் 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 2020 மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.13,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் டிவி ரூ.10,490 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 25% சலுகையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 32 இன்ச் அளவுகளில், நெட்ஃபிளிக்ஸ், பேஸ்புக், அமேசான் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது எச்டி ரெடி, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 20 வாட்ஸ் அவுட்புட் விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட் ஆதரவை கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு மல்டி ஓஎஸ் அணுகலோடு வருகிறது.
ஏசர் 32 இன்ச் ஸ்மார்ட்டிவி
ஏசர் 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஆதரவோடு வருகிறது. இது கருப்பு வண்ண விருப்பத்துடன் வரும் 2021 மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியானது ரூ.22,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.13,999 என இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது 39% தள்ளுபடியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 32 இன்ச் அளவு டிஸ்ப்ளே உடன் எச்டி ரெடி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 24 வாட்ஸ் அவுட்புட் டால்பி ஆடியோ ஆதரவோடு வருகிறது.
பெஸ்டான் 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி
அதேபோல் பெஸ்டான் 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.21,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.11,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு ரூ.10000 வரை அதாவது 45% வரை தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்டிவியானது 32 இன்ச் அளவோடு எச்டி ரெடி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது நெட்பிளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் கிடைக்கிறது.
கோடக் 32 இன்ச் எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி
கோடக் 32 இன்ச் எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவியானது கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி 2020 மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.18499 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.12490 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 32% தள்ளுபடியில் அதாவது ரூ.6009 என்ற சலுகையோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி 32 இன்ச் அளவுகளில் எச்டி ரெடி ஆதரவோடு வருகிறது. இது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் அம்சத்தோடு வருகிறது. இது இந்திய தயாரிப்பு ஸ்மார்ட்டிவியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒனிடா 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி
ஒனிடா 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவியானது கருப்பு வண்ண விருப்பத்தில் வரும் 2021 மாடல் ஆகும். இது ரிமோட் அலெக்ஸா ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி விலை ரூ.19,990 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி தற்போது ரூ.15,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 20% தள்ளுபடி விலையில் அதாவது ரூ.3991 என்ற விலைக்குறைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி எச்டி ரெடி ஆதரவோடு 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவி 20 வாட்ஸ் அவுட்புட் டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு மற்றும் வாய்ஸ் ரிமோட் அலெக்ஸா, நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ் உள்ளிட்ட அம்சங்களோடு வருகிறது.


Click it and Unblock the Notifications