அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்: வாங்க பார்ப்போம்.!

அமேசானில் தினசரி பல்வேறு சாதனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. அதேபோல் விரைவில் பண்டிகை காலம் வருவதால் இன்னமும் அதிக சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்.!

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது அமேசான் வலைத்தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

1.சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ

Mi 80 cm (32 inches) 5A Series HD Ready Smart Android LED TV L32M7-5AIN (Black)

அமேசான் தளத்தில் சியோமி நிறுவனத்தின் 5ஏ ஸ்மார்ட் டிவிக்கு 44 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.13,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவி 1366 x 768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி. பின்பு டால்பி ஆடியோ ஆதரவு கொண்டு 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஈதர்நெட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்.

2.கார்போன் Millennium Series HD Ready ஸ்மார்ட் டிவி

Karbonn 80 cm (32 inches) Millennium Series HD Ready Smart Android LED TV KJK32ASHD (Black)

32-இனச் கொண்ட கார்போன் Millennium Series HD Ready ஸ்மார்ட் டிவி மாடலுக்கு அமேசாள் தளத்தில் 55 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.8,990-விலையில் வாங்க முடியும். இந்த கார்போன் ஸ்மார்ட் டிவி 1366 x 768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல்
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், டால்பி ஆடியோ ஆதரவு, பெசல்-லெஸ் டிசைன், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த கார்போன் Millennium Series HD Ready ஸ்மார்ட் டிவி.

3. டிசிஎல் ஸ்மார்ட் டிவி (32S5205)

TCL 80 cm (32 inches) HD Ready Certified Android Smart LED TV 32S5205 (Black)

அமேசான் தளத்தில் டிசிஎல் ஸ்மார்ட் டிவி (32S5205) மாடலுக்கு 61 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.11,990-விலையில் வாங்க முடியும். டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 16 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளது இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல்.

அதேபோல் 1366 x 768 பிக்சல்ஸ்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி 32S5205) மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். பின்பு எச்டிஎம்ஐ போர்ட்,
யுஎஸ்பி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல்.

4.ஏசர் ஸ்மார்ட் டிவி (AR32AR2841HDFL)

Acer 80 cm (32 inches) I Series HD Ready Android Smart LED TV AR32AR2841HDFL (Black)

அமேசானில் தரமான 32-இன்ச் ஏசர் ஸ்மார்ட் எல்இடி டிவி (AR32AR2841HDFL) மாடலை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 35 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

64-பிட் குவாட்-கோர் பிராசஸர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஏசர் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 1366x768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

இதுதவிர டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், Chromecast ஆதரவு, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், யுஎஸ்பி போர்ட், போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி. மேலும் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி.

5. எல்ஜி எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி 32LM563BPTC

LG 80 cm (32 inches) HD Ready Smart LED TV 32LM563BPTC (Dark Iron Gray) (2020 Model)

எல்ஜி எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி 32LM563BPTC மாடலுக்கு அமேசான் தளத்தில் 30 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.15,490-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி ஸ்மார்ட் டிவி மாடல் Web OS வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இரண்டு ஸ்பீக்கர்கள் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. மேலும் 1366 x 768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குவாட்-கோர் பிராஸசர், 2 எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி மாடல்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X