OFFER-னா இப்படி இருக்கனும்.. 7100mAh பேட்டரி கொண்ட லேட்டஸ்ட் OnePlus 5G போன் மீது விலை குறைப்பு!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆக கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஸ்மார்ட்போனின் மீது ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் 3 வகையான சலுகைகள் (3 Offers) அறிவிக்கப்பட்டுஉள்ளது.
நினைவூட்டும் வண்ணம் அறிமுகத்தின் போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் வெளியீட்டு விலை ரூ.24,999 ஆக இருந்தது. இப்போது இந்த விலை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளுடன் வங்கி தள்ளுபடிகளையும் பெறலாம்.

விலை குறைப்பை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் இப்போது ரூ.23,499 க்கு வாங்க கிடைக்கிறது, இது அறிமுக விலையான ரூ.24,999 உடன் ஒப்பிடும் போது ரூ.1500 குறைவாகும். இதற்கு மேல், எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் (SBI Credit and Debit Cards) ரூ.1,250 பெண் டிஸ்கவுண்ட்டும் கிடைக்கும். இதன்கீழ் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.22,249 க்கு கொண்டுவர முடியும்.
கடைசியாக (மூன்றாவது சலுகை) வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் (Exchange Offers) உள்ளன. எக்ஸ்சேஞ்ச் போனஸின் (Exchange Bonus) கீழ் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் ஃபைனல் ஆபர் ப்ரைஸ்-ஐ மேலும் குறைக்க முடியும். இந்த சலுகை அமேசான் இந்தியாவின் (Amazon India) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கிடைக்கிறது, மேலும் ஒன்பிளஸ் இந்தியாவின் (OnePlus India) அதிகாரப்பூர்வ தளத்திலும் கூட இந்த சலுகைகள் உள்ளன.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (OnePlus Nord 5 Specifications and Features): டூயல் சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் ஆக்சிஜன்ஓஎஸ்15 (OxygenOS 15) ஸ்கின் கொண்டு இயங்குகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான சற்றே சிறிய 6.77-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இந்த போன் 12ஜிபி வரை LPDDR5x ரேம் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அபெக்ஸ் (MediaTek Dimensity 8350 Apex) சிப்செட் கொண்டு இயங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது சோனி LYT-600 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எப் /1.8 அபெர்க்ஷர் உடன் வருகிறது. ப்ரைமரி கேமராவுடன் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், இது OV08D10 சென்சார் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடன் கூடிய 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, என்எப்சி, ஜிபிஎஸ், நாவிக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை வழங்குகிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு டிவைஸ்களை கட்டுப்படுத்த பயன்படுத்தக்கூடிய இன்ப்ரா ரெட் (IR) டிரான்ஸ்மிட்டரும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது 7,100mAh பேட்டரியை கொண்டுள்ளது, இது சேர்க்கப்பட்ட அடாப்டருடன் 80W சூப்பர்வூக் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி 65 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. அளவீட்டில் இது 163.5×76×8.2மிமீ உள்ளது மற்றும் எடையில் 199 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications








