Home
Deal of the day

அமேசான் அதிரடி.. ரூ.9,999 பட்ஜெட்ல சோனி கேமரா.. 5000mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் டெக்னோ பாப் 9 5ஜி (TECNO POP 9 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சோனி கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் டெக்னோ பாப் 9 5ஜி வெளிவந்தது.

இப்போது டெக்னோ பாப் 9 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம். அதாவது அமேசான் தளத்தில் டெக்னோ பாப் 9 5ஜி போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அமேசான் அதிரடி.. ரூ.9,999 பட்ஜெட்ல சோனி கேமரா.. எந்த மாடல்?

டெக்னோ பாப் 9 5ஜி அம்சங்கள் (TECNO POP 9 5G Specifications): தரமான ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த புதிய டெக்னோ பாப் 9 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் HiOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.

குறிப்பாக 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1612 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி ஐஎம்எக்ஸ்582 (Sony IMX582) பிரைமரி கேமரா மற்றும் ஏஐ செகண்டரி லென்ஸ் ஆதரவும் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

தனித்துவமான டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) கொண்டுள்ளது இந்த போன். மேலும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. 3.5எம்எம் ஆடியோ ஜாக் வசதியும் இந்த போனில் உள்ளது.

அதேபோல் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அமேசான் அதிரடி.. ரூ.9,999 பட்ஜெட்ல சோனி கேமரா.. எந்த மாடல்?

இந்த டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and Splash resistant) கொண்டுள்ளது. பின்பு 5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி ((Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 189 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
29 Percent Discount on TECNO POP 9 5G with 4GB Ram in Amazon Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X