தொக்கா ரூ.5000 விலை குறைப்பு.. அம்புட்டு பேரும் அள்ளும் புது Redmi 5G போன்.. Amazon-ஐ தெறிக்க விடும் ஆர்டர்கள்
ரூ.10,000-க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் ரெட்மி ஏ4 5ஜி, ரூ.15,000 - ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் ரெட்மி நோட் 14 சீரீஸ் ஆகிய புதிய ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்.. அமேசான் வலைத்தளமானது 5ஜி ஆதரவுடன் வரும் லேட்டஸ்ட் ரெட்மி ஸ்மார்ட்போனை ரூ.5000 மலிவான விலைக்கு விற்பனை செய்கிறது.
அது ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போனாகும். அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் தற்போது இது 28% நேரடி டிஸ்கவுண்ட்டை பெற்று, எம்ஆர்பி விலையான ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் ஆபர் விலையாகும்.

இதே ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கிறது. அது 31% நேரடி டிஸ்கவுண்ட்டை பெற்று, எம்ஆர்பி விலையான ரூ.19,999 க்கு பதிலாக ரூ.13,845 க்கு வாங்க கிடைக்கிறது. சுவாரசியமாக இந்த டிஸ்கவுண்ட் இல்லை ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் அனைத்து (பிளாக் டைமண்ட், ஹுவாயான் ப்ளூ மற்றும் ஆர்ச்சிட் பிங்க்) கலர் ஆப்ஷன்களின் மீதும் கிடைக்கிறது.
இந்த நவம்பர் மாதத்தில் ரெட்மி ஏ4 5ஜி மாடலும், டிசம்பர் மாதத்தில் ரெட்மி நோட் 14 சீரிஸும் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில்.. கடந்த ஜூலை மாதம் அறிமுகமான ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? என்று கேட்டால் . . ஏன் நம்பி வாங்கலாம் என்பதறகான 4 காரணங்கள் எங்களிடம் உள்ளன.
முதலாவது காரணம் - இது ஸ்மூத் ஆன 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இரண்டாவது காரணம் - இது விலைக்கு ஏற்ற பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது. மூன்றாவது காரணம் - பகல் நேரங்களில் இதன் கேமராக்கள் நல்ல அவுட்புட்களை வழங்குகிறது. நான்காவது காரணம் - இது டீசன்ட் ஆன பேட்டரி லைஃப்பை வழங்குகிறது அதே சமயம் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனை ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதறகான 3 காரணங்களும் எங்களிடம் உள்ளன.
முதல் காரணம் - இது பல எண்ணிக்கையிலான தேர்ட் பார்ட்டி ஆப்களை கொண்டுள்ளது. இரண்டாவது காரணம் - இதன் டிஸ்பிளே ஸ்மூத் ஆக இருக்கிறது தான் ஆனால் அதிக அளவிலான பிரைட்னஸை வழங்கவில்லை.மூன்றாவது காரணம் - இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் இல்லை. ஹெட்செட் இல்லாமல் இந்த ஸ்மார்ட்போனை மல்டிமீடியா தேவைகளுக்கு பயன்படுத்துவோருக்கு இதுவொரு குறையாக தெரியலாம்.
ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, டிஸ்பிளேவை பொறுத்தவரை இது கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ சிப்செட் மற்றும 8ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன்ஆண்ட்ராய்டு 14 அஓஎஸ் டிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் கொண்டு இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது சாம்சங் ஐசோசெல் எச்சம்6 சென்சார் மற்றும் எப்/1.75 அபெக்ஷர் உடனான 108எம்பி ப்ரைமரி கேமரா உள்ளது. செல்பீ கேமராவை பொறுத்தவரை 13எம்பி சென்சாரை கொண்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, இது 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5030mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications