மிரட்டலடி ஆபர்.. ரூ.15,000-க்கு வந்த இந்த புது 5G போன் இப்போ ரூ.8,999 தான்.. 12GB ரேம், 50MP கேம், 5000mAh!
இந்தியாவில், கடந்த 2024 ஜூலை மாதத்தில் அறிமுகமான.. அதாவது சரியான 4 மாதங்களுக்கு முன்னர் அறிமுகமான ஒரு ஐக்யூ 5ஜி ஸ்மார்ட்போன் (iQOO 5G Smartphone) ஒன்றின் மீது அபாரமான ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமான இந்த ஐக்யூ 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ.8,749 க்கு வாங்க கிடைக்கிறது. அதெப்படி? என்ன மாடல்? இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? என்ன ஆபர்? நாம் இங்கே பேசுவது ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். தற்போது இந்த ஸ்மார்ட்போன், அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் 28% நேரடி தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது எம்ஆர்பி விளையான ரூ.14,499 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.

கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1500 வரையிலான இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்டும் கிடைக்கிறது. இப்படியாக ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை (Final Offer Price) ரூ.8999 க்கு கொண்டு வர முடியும். ரூ.9,000 க்குள் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிடும் எவருமே, ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி மாடலை கருத்தில் கொள்ளலாம்.
ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடனான 6.56 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை (HD+ LCD Display) கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை, இது கிராபிக்ஸ்காக மாலி-ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) உடனான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் (MediTek Dimensity 6300 5G Chipset) கொண்டு இயங்குகிறது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன் 6ஜிபி வரையிலான "வழக்கமான" ரேம் (6GB Actual RAM) மற்றும் விர்ச்சுவல் ரேம் தொழில்நுட்பம் (Virtual RAM Technology) வழியிலான கூடுதல் 6ஜிபி விர்ச்சுவல் ரேம் (6GB Virtual RAM) என மொத்த 12ஜிபி அளவிலான ரேம்-ஐ வழங்கும். மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டு (Micro SD Card) வழியாக 1டிபி வரை மெமரியை விரிவாக்க கூடிய ஆதரவையும் கொண்டுள்ளது.
ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50 எம்பி சோனி ஏஐ கேமரா (50MO Sony AI Camera) + 2 எம்பி பொக்கே கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உள்ளது. முன்பக்கத்தில் 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. சாஃப்ட்வேரை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 14 (FuntouchOS 14) உடன் அனுப்பப்படுகிறது. இதற்கு 2 வருட மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்களையும் (Android Updates), 3 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ் (Security Updates) கிடைக்கும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை, இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன் 15W சார்ஜிங் ஆதரவு கொண்ட 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கை (IP64 Rating) கொண்டுள்ளது; 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கை கொண்டுள்ளது மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் (Fingerprint Sensor) கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications