Home
Deal of the day

புது லுக்கில் பழைய சிங்கக்குட்டி.. 22 நாள் பேட்டரி, UPI ஆதரவு.. ரூ.1,198 ஆபர் விலையில் NOKIA 105 விற்பனை!

நோக்கியா (NOKIA) நிறுவனம் மிகவும் சமீபத்தில் தான் தரமான கம்பேக்கை கொடுத்து இருந்தது. நோக்கியா 108 (NOKIA 108) மற்றும் நோக்கியா 125 (NOKIA 125) ஆகிய 2 போன்களின் 2024 மாடல்களை அறிமுகம் செய்து.. எல்லா போன்களுமே எச்எம்டி பிராண்டிங்கின் கீழ் வராது என்பதை ஆணித்தனமாக நிரூபித்து, நோக்கியா ஃபேன்ஸ்களை ஆசுவாசப்படுத்தி இருந்தது.

இந்த நேரம் பார்த்து, அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளமானது நோக்கியா 105 2023 (NOKIA 105 2023) மாடல் மீது 25% நேரடி தள்ளுபடியை அறிவித்து.. ரூ.1000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் ஒரு நல்ல ஃபீச்சர் போனை தேடுபவர்களை தன்வசம் ஈர்த்துள்ளது. நோக்கியா 105 2023 மாடலின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

ரூ.1,198 ஆபர் விலையில் NOKIA 105 விற்பனை!

அசல் விலை VS ஆபர் விலை: அமேசான் இந்தியா வலைத்தளத்தில் தற்போது, நோக்கியா 105 2023 மாடல் 25% தள்ளுபடியை பெற்று, எம்ஆர்பி விலையான ரூ.1,599 க்கு பதிலாக ரூ.1,198 க்கு வாங்க கிடைக்கிறது. சுவாரசியமாக இந்தடிஸ்கவுண்ட் நோக்கியா 105 2023 மாடலின் அனைத்து 3 கலர் ஆப்ஷன்களின் (பிளாக், ப்ளூ மற்றும் ரெட்) மீதும் கிடைக்கிறது.

நோக்கியா 105 2023 மாடலின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.8-இன்ச் க்யூவிஜிஏ டிஸ்பிளேவை (QVGA Display) கொண்டுள்ளது. இது சீரீஸ் 30+ ஆப்ரேட்டிங் சிஸ்டம் (Series 30+ Operating System) மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது வயர்டு மற்றும் வயர்லெஸ் மோட்களுடன் (Wired and Wireless Mode) எஃப்எம் ரேடியோவுடன் (FM Radio) வருகிறது.

இந்த நோக்கியா போன் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (3.5mm Headphone Jack) மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட்டையும் (USB Type-C Port) கொண்டுள்ளது. எல்லாவற்றை விட முக்கியமாக இது - இன்பில்ட் யுபிஐ 123பே (Inbulit UPI 123PAY) ஆதரவுடன் வருகிறது. இதன் மூலம் இண்டர்நெட் அக்சஸ் (Internet Access) இல்லாமலேயே யுபிஐ (UPI) எனப்படும் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸை (Unified Payment Interface) பயன்படுத்தி உடனடியாக பணம் செலுத்தும் வசதியையும் கொண்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை நோக்கிய 105 2023 மாடல் ஆனது 1000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 12 மணிநேர டால்க் டைம் (12 Hours Talktime) அல்லது 22 நாட்கள் வரையிலான ஸ்டேன்ட்பை டைம்-ஐ (22 Days Standby Time) வழங்குகிறது. அளவீடுகளை பொறுத்தவரை நோக்கியா 105 ஆனது 115.07x49.4x14.45 மிமீ மற்றும் எடையில் 78.7 கிராம் உள்ளது.

சமீபத்தில் அறிமுகமான நோக்கியா 108 2024 மற்றும் நோக்கியா 125 2024 மாடல்களின் முக்கிய அம்சங்கள்: இரண்டுமே 2.0 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளன; வயர்டு மற்றும் வயர்லெஸ் மோட்களுடன் எஃப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், கிளாசிக் ஸ்னேக் கேம், வாய்ஸ் ரெக்கார்டர், டூயல் பிளாஷ் லைட், 2000 காண்டாக்ட்களை சேமிப்பதற்கான ஸ்பேஸை ஆகியவைகளை கொண்டுள்ளன.

மேலும் 128எம்பி ரேம் மற்றும் 64எம்பி மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டிற்கான ஆதரவையும் கொண்டுள்ளன. இவ்விரு மாடல்களுக்கான முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை நோக்கியா 108 4ஜி 2024 ஃபீச்சர் போன் ஆனது 1450mAh பேட்டரியை கொண்டுள்ளது, மறுகையில் உள்ள நோக்கியா 125 4ஜி 2024 ஃபீச்சர் போன் ஆனது 1000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

நோக்கியா 108 4ஜி மற்றும் நோக்கியா 125 4ஜி 2024 வெர்ஷன்கள் விலை விவரங்களை பொறுத்தவரை, தற்போது வரையிலாக இவ்விரு மாடல்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனால் நோக்கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. கூடிய விரைவில் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

English summary
25 Percent Discount on NOKIA 105 2023 in Amazon Buy This Mobile For Just Rs 1198
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X