Home
Deal of the day

25% டிஸ்கவுண்ட்.. Amazon-ல் அடிச்சு புடிச்சு வாங்கப்படும் CMF 5ஜி போன்.. கண்ண மூடிக்கிட்டு வாங்க 5 காரணங்கள்!

நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எப் பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன் ஆக சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமானது. நத்திங் ஸ்மார்ட்போன்களை போலவே, இதுவும் இன்டர்சேஞ்சபிள் பேக் கவர் (Interchangeable Back Cover) மற்றும் தனித்துவமான டிசனுடன் (Unique Design) என "பார்ப்பதற்கு" சற்றே வித்தியாசமான ஸ்மார்ட்போனாக உள்ளது.

அப்படியான சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் இந்தியா வளைத்தத்தில் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. அப்படி என்ன ஆபர்? சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? அடுத்தடுத்த மாதங்களில் முக்கியமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ள நிலையில், சிஎம்எப் போன் 1-ஐ இப்போது நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:

25% டிஸ்கவுண்ட்.. Amazon-ல் அடிச்சு புடிச்சு வாங்கப்படும் CMF 5ஜி போன்

அமேசான் வலைத்தளமானது, சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை 25% நேரடி தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.19,999 க்கு பதிலாக தற்போது ரூ.14,978 க்கு வாங்க கிடைக்கிறது.

சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? இதை ஏன் வாங்கலாம் என்பதற்கான 5 முக்கியமான காரணங்களை எங்களால் முன்வைக்க முடியும். முதல் காரணம் - இது கஸ்டமைபிலிட்டி, ரிப்பேர் மற்றும் ஸ்டேபிலிட்டி ஆகியவற்றை மையமாக கொண்ட மிகவும் தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளது. இரண்டாவது காரணம் - இது எச்டிஆர் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பிபிரைட் ஆன ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது

மூன்றாவது காரணம் - இதன் 33W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000எம்ஏஎச் பேட்டரி ஆனது சிறந்த பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. நான்காவது காரணம் - இது விலைக்கு ஏற்ற ஆக்டாகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 5ஜி சிப்செட்டை பேக் செய்கிறது. ஐந்தாவது காரணம் - இஐஎஸ் ஆதரவு உடனான இதன் 50எம்பி மெயின் கேமராவானது நல்ல இமேஜ் குவாலிட்டியை வழங்குகிறது

நிறைகள் மட்டுமல்ல சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனில் சில குறைகளும் உள்ளன. முதல் குறை - இந்த ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இருக்காது; தனியாக பணம் கொடுத்து தான் சார்ஜர் வாங்க வேண்டும். இரண்டாவது குறை - இது "சாதாரணமான" ஐபி52 ரேட்டிங்கையே கொண்டுள்ளது. மூன்றாவது குறை - இது "சுமாரான" சிங்கிள் லவுட் ஸ்பீக்கரை பேக் செய்கிறது.

அடுத்து வரும் மாதங்களில், இந்தியாவில் என்னென்ன முக்கியமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன? ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) ஸ்மார்ட்போன் நவம்பர் 20 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது இந்தியாவில் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாக உள்ள முதல் ரெட்மி 5ஜி போனாக இருக்கும்

பின்னர் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரீஸ் (Oppo Find X8 Series) ஸ்மார்ட்போன்கள் ஆனது நவம்பர் 21 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன்கீழ் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 மற்றும் பைண்ட் எக்ஸ்8 ப்ரோ அறிமுகமாகும். இவைகள் முறையே ரூ,49,990 மற்றும் ரூ.62,990 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ எக்ஸ்200 சீரீஸ் (Vivo X200 Series) ஸ்மார்ட்போன்கள் நவம்பர் 22 ஆம் தேதியன்று உலகளவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சீரிஸின் கீழ் விவோ எக்ஸ்200 மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ மாடல்கள் மட்டுமே உலகளவில் அறிமுகமாகும் என்றும், விவோ எக்ஸ்200 ப்ரோ மினி மாடல் ஆனது சீனாவிற்கு பிரத்யேகமானதாக இருக்கும். விலையை பொறுத்தவரை, எக்ஸ்200 ரூ.50,990 க்கும், எக்ஸ்200 ப்ரோ ரூ.62,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

பின்னர் ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போன் நவம்பர் 26 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஃபிளாக்ஷிப் சிப்செட்டுடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். விலையை பொறுத்தவரை இது ரூ.55,000 - ரூ.60,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

கடைசியாக ஐக்யூ 13 (iQOO 13) ஸ்மார்ட்போன் டிசம்பர் 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2025 ஆம் ஆண்டின் ஜனவரி அல்லது பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முக்கிய போட்டியாளர் ஆன இது சீனாவில் இது ரூ.47,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்ற ஆக்ரோஷமான விலை நிர்ணயத்தை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

English summary
25 Percent Discount on CMF Phone 1 5G Smartphone in Amazon India Should We Buy this
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X