Home
Deal of the day

அடிச்சு புடிச்சு ஆர்டர்.. ரூ.3,750 கம்மி.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் குடியரசு தின விற்பனையில் (Amazon Republic Day Sale) 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களை தட்டித் தூக்கும்படியான பட்ஜெட்டில் ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ (iQOO Z9s Pro) வந்துள்ளது. ரூ.24,999 பட்ஜெட்டில் வெளியான இந்த போன் டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.21,249 பட்ஜெட்டில் கிடைக்கிறது. சோனி சென்சார் கேமரா, லெதர் பேக் பேனல், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்ற பீச்சர்களில் பின்னி எடுக்கிறது. இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ போனின் முழு விவரங்கள் இதோ.

அமேசான் தளத்தில் குடியரசு தின விற்பனை சக்கைப்போடு போட்டுவருகிறது. இதில் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியான ஐக்யூ மாடல்கள் நம்ப முடியாத டிஸ்கவுண்ட் காரணமாக பட்ஜெட்டில் கிடைக்கின்றன. ஆகவே, ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ போனுக்கும் ரூ.3,750 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதாவது, இந்த ஐக்யூவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.24,999 பட்ஜெட்டில் வந்தது.

அடிச்சு புடிச்சு ஆர்டர்.. ரூ.3,750 கம்மி.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே மாடல்!

இப்போது, அமேசானில் வெறும் ரூ.22,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த கம்மியான பட்ஜெட்டிலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதே எஸ்பிஐ கார்ட் மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், ரூ.1750 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.21,249 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

இந்த உடனடி டிஸ்கவுண்ட் சலுகை மட்டுமல்லாமல், ரூ.21,750 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. வேகன் லெதர் பேனல் கொண்ட ஃபிளம்போயன்ட் ஆரஞ்ச் (Flamboyant Orange) கலரில் விற்பனைக்கு வருகிறது. லக்ஸ் மார்பிள் (Luxe Marble) கலரிலும் ஆர்டருக்கு கிடைக்கிறது. இப்போது, டிஸ்பிளே, கேமரா, பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ போனானது ஒரு வருட பழைய மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (4nm Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டை பேக் செய்து கொடுத்துள்ளது.

இதுவொரு ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) பேஸ்டு மாடலாகும். வெட் டச் (Wet Touch) கொண்ட 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) கிடைக்கிறது. ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொடுக்கும் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனல் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

அவுட்டோருக்கும் பக்கா அவுட்புட் எதிர்பார்க்கும்படி 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்காக 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் கலர் அக்கியூரசிக்காக 1 பில்லியன் கலர் டெப்த் இந்த டிஸ்பிளேவில் கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடல்களுக்கு 5000mAh பேட்டரி கேபாசிட்டி பேக் செய்யப்படுவது வழக்கம், ஆனால், இதில் 5500mAh பேட்டரி கிடைக்கிறது.

இந்த பேட்டரி இருந்தும் 7.49 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்று கொள்ளலாம். 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + ஆரா லைட் (Aura Light) வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ் 882 (Sony IMX 882) சென்சார், 4K ஷூட் மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

English summary
23 Percent Discount on iQOO Z9s Pro With 8GB RAM in Amazon Republic Day Deal Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X