யாரு சாமி அவன்.. வெறும் ரூ.21,000 பட்ஜெட் SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 5500mAh.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
மார்கெட் மிரளும்படியான டிஸ்கவுண்ட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் மெயின் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியான ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ (iQOO Z9s Pro) கிடைக்கிறது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) அடிமட்ட விலைக்கு வந்திருக்கும் இந்த ஐக்யூ போனின் முழு பீச்சர்கள் எப்படி இருக்கிறது? விலை மற்றும் டிஸ்கவுண்ட் எவ்வளவு? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
தீபாவளி டிஸ்கவுண்ட்டில் பிரீமியம் மற்றும் மிட்-ரேஞ்ச் போன்கள் இதுவரையில் கிடைக்காத விலையில் ஆர்டருக்கு கிடைக்கின்றன. இதில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்கள் அறக்க பறக்கும்படி ரூ.24,999 பட்ஜெட்டில் வெளியான ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ இப்பேது வெறும் ரூ.21,000 பட்ஜெட்டில் கிடைக்கிறது. வேகன் லெதர் பேனல் வருவதால், பிரீமியம் லுக் கொடுக்கிறது.

ஐக்யூ இச9ட்எஸ் ப்ரோ அமேசான் டிஸ்கவுண்ட் (iQOO Z9s Pro Amazon Discount): இந்த ஐக்யூ போனின் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை அமேசானில் ரூ.24,998ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.3,250 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.21,748 பட்ஜெட்டில் இந்த போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இதுபோக ரூ.23,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்ய வேண்டும். அதேபோல ஈஎம்ஐ மூலம் வங்கினால், ஆக்சிஸ் கிரெடிட் கார்டுக்கு ரூ.3,250 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ போனில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன?
ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ அம்சங்கள் (iQOO Z9s Pro Specifications): இந்த ஐக்யூ மாடலில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே வருவதால் 7.49 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கிடைக்கிறது. 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (Full HD) ரெசொலூஷன் ரெசொலூஷன் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. பிரீமியம் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camere System) + ஆரா எல்இடி பேக் செய்துள்ளது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா (ஓஐஎஸ் டெக்னாலஜி) மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.
இந்த ஐக்யூவில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலும் இருக்கிறது. இந்த ப்ரோ மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) வருகிறது.
மேலும், பட்ஜெட்டுக்கு ஏற்ப ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 80W சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி வருகிறது. இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோவில் பிளேம்போயன்ட் ஆரஞ்ச் (Flamboyant Orange) மற்றும் லக்ஸ் மார்பிள் ஒயிட் (Luxe Marble White) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications