முரட்டு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.17,999 போதும்.. 5110mAh பேட்டரி.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் கொண்ட சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட டைமன்சிட்டி 7025 சிப்செட், சோனி எல்ஒய்டி சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5110mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் வெளியான ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) போனுக்கு மிரளவிடும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த ரெட்மி போனின் பீச்சர்கள், விலை இதோ.
ரெட்மி நோட் 14 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 5G Specifications): இந்த ரெட்மி போனின் டிசைன் பிரீமியம் லுக் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு பக்காவாக இருக்கும். ரவுண்டட் எட்ஜ் மற்றும் கர்வ்ட் ஸ்லீக் பாடியில் பிரீமியம் ஹேண்டில் கொடுக்கிறது. டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது.

6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர் 10 (HDR 10) சப்போர்ட் கிடைக்கிறது. பட்ஜெட்டிலும் வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology) உள்ளது.
லேட்டஸ்ட் மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஏஐ பீச்சர்களுடன் சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) கிடைக்கிறது. கேமிங் மற்றும் லாக்-ப்ரீ அவுட்புட் எதிர்பார்க்கும்படி ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா (Octa Core 6nm MediaTek Dimensity 7025 Ultra) சிப்செட் மற்றும் ஐஎம்ஜி ஜிபியு (IMG GPU) கிடைக்கிறது.
6 ஜிபி ரேம் வேரியண்ட் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் வேரியண்ட் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்களில் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் மற்றும் டூயல் சிம் சிலாட் கிடைக்கிறது. பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 20 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
ஹை-ரெஸ் ஆடியோ (Hi Res Audio) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது. இந்த ரெட்மி நோட் 14 5ஜி போனில் IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கும் 5110mAh பேட்டரி வருகிறது. 7.99 மிமீ தடிமனில் பிரீமியம் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. இப்போது விலையை பார்ப்போம்.
ரெட்மி நோட் 14 5ஜி அமேசான் விற்பனை (Redmi Note 14 5G Amazon Sale): இந்த ரெட்மியின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆக இருக்கிறது. இருப்பினும், அமேசான் விற்பனையில் இப்போது ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தாலும் ரூ.1000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
எச்டிஎப்சி கிரெடிட் கார்டு அல்லது ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும். ரூ.18,049 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ரூ.17,999 பட்ஜெட்டில் இந்த ரெட்மி நோட் 14 5ஜி போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். டைட்டன் பிளாக் (Titan Black), பாண்டம் பர்பிள் (Phantom Purple), மிஸ்டிக் ஒயிட் (Mystique White) கலரில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications