பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. 120W சார்ஜிங்.. 100X ஜூமிங்.. 12GB ரேம்.. 144Hz டிஸ்பிளே.. 64MP கேமரா.. எந்த மாடல்?
144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 120W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரி, 12 ஜிபி ரேம், 64 எம்பி டெலிபோட்டோ கேமரா, 100X டிஜிட்டல் ஜூமிங் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் வெளியாகி கேமிங் மற்றும் கேமரா பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) மாடலுக்கு அமேசான் விற்பனையில் (Amazon Sale) பட்டையை கிளப்பும் உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த ஐக்யூவின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்ப்போம்.
ஐக்யூ 12 5ஜி அமேசான் (iQOO 12 5G Amazon): இந்த ஐக்யூ போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.52,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு வருகிறது. இந்த டிஸ்கவுண்ட்டை பெற எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர செய்ய வேண்டும்.

ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தாலும், அதே கிரெடிட் கார்டுக்கு ரூ.3000 டிஸ்கவுண்ட் கிடைக்கும். இந்த டிஸ்கவுண்ட் போக ரூ.46,400 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த பிரீமியம் போனை ரூ.49,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இப்போது, முழு பீச்சர்கள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
ஐக்யூ 12 5ஜி அம்சங்கள் (iQOO 12 5G Specifications): இந்த ஐக்யூ மாடலில் ஃபன்ட்ச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. 1.5K ரெசொலூஷனுடன் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) பிளாட் டிசைன் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமல்லாமல், 3000 நிட்ஸ் பிரைட்னஸ் வருகிறது.
இந்த எல்டிபிஓ (LTPO) டிஸ்பிளேவில் 2160Hz PWM டிம்மிங் உள்ளது அதேபோல எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஐக்யூ 12 5ஜி போனில் ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 மொபைல் (Octa Core 4nm Snapdragon 8 Gen 3 Mobile) சிப்செட் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டுக்கு ஏற்றபடி அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிடைக்கிறது.
இது பிரீமியம் மாடலாக இருப்பதால், 100X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 3X ஆப்டிகல் ஜூமிங் கொண்ட 64 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சாரும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) வீடியோ டெக்னாலஜியும் கிடைக்கிறது. 8K வீடியோ ஷூட் வருகிறது.
50 எம்பி மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50எச் (Omnivision OV50H) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமராவில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் கிடைக்கிறது. ஆகவே, கேமராவில் பின்னிப்பெடல் எடுக்கும்படியான அவுட்புட் கிடைக்கும். செல்பீ ஷூட்டரில் 16 எம்பி கேமரா கிடைக்கிறது.
இந்த ஐக்யூ 12 5ஜி போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்கிறது. 5000mAh பேட்டரிக்கு 120W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு குயிக் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் ஹை-பை ஆடியோவும் உள்ளது.
பிரீமியம் டிசைனில் 8.1 மிமீ தடிமன் மற்றும் 203.9 கிராம் எடை உள்ளது. IP64 ரெசிஸ்டன்ட் மற்றும் 5ஜி எஸ்என்ஏ /எஸ்ஏ (5G NSA/SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன. அண்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் இன்பிராரெட் சென்சார்கள் உள்ளன. லெஜண்ட் (Legend) மற்றும் ஆல்பா (Alpha) மற்றும் ரெட் ஆகிய கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications