Home
Computer

முதல் டேப்லெட்டையே மலிவு விலையில் வழங்கும் சின்க்

By Karthikeyan
முதல் டேப்லெட்டையே மலிவு விலையில் வழங்கும் சின்க்

இந்தியாவைச் சேர்ந்த சின்க் குளோபல் பிரைவேட் லிமடட் நிறுவனம் தனது முதல் டேப்லெட்டை இந்திய டேப்லெட் சந்தையில் களமிறக்கி இருக்கிறது. சின்க் ஸட்1000 என்று அழைக்கப்படும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் 9.7 இன்ச் அளவில் ஒரு சூப்பரான டிஸ்ப்ளேயுடன் வருகிறது.

பட்ஜெட் விலையில் வரும் இந்த டேப்லெட் ரூ.10,990க்கு விற்கப்படுகிறது. இந்த டேப்லெட்டை பிலிப்கார்ட், ஹோம்ஷாப்18, நாப்டல், ஸ்னாப்டீல், இந்தியாடைம்ஸ் மற்றும் இன்பிபீம் போன்ற ஆன்லைன் கடைகளில் வாங்கலாம்.

ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த டேப்லெட்டில் ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அப்டேட் செய்யலாம். இந்த டிஸ்ப்ளேயில் 5 பாயிண்ட் மல்டி டச் கப்பாசிட்டிவ் எச்டி வசதி உள்ளது. மேலும் இந்த டேப்லெட்டில் 3ஜி மற்றும் வைபை வசதியும் உண்டு. மேலும் இந்த டேப்லெட்டோடு ரூ.1350 பெறுமானமுள்ள லிக்ரா பவுச், ஸ்கிரீன் ப்ரொடெக்டர், இயர்போன்ஸ் மற்றும் ஒரு மாதத்திற்கான பிக்பிலிக்ஸ் சலுகை போன்றவையும் வழங்கப்படுகின்றன.

சின்க் நிறுவனத்தின் தலைவர் ஆஷிஷ் கார்க் கூறும் போது, இந்த டேப்லெட் சின்க் நிறுவனத்தின் முதல் முயற்சியாகும் எந்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த டேப்லெட்டில் ஜெல்லி பீன் மிக விரைவில் அப்டேட் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த டேப்லெட்டில் 1.5 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர், எஆர்எம் கோர்ட்டெக்ஸ் எ8 ப்ராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி மெமரி, அதை 32ஜிபி வரை அதிகரிக்கும் வசதி, மினி எச்டிஎம்ஐ, மைக்ரோ யுஎஸ்பி போர்ட்டுகள், டிஎப் கார்ட் மற்றும் டிசி போர்ட் போன்ற வசதிகள் உள்ளன. அதோடு இபிபோ, ஹூங்கமா, பேஸ்புக் மற்றும் பல சமூக வலைத்தளங்களையும் இந்த டேப்லெட் கொண்டு வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X