Home
Computer

எக்கச்சக்க அப்ளிகேசன்களுடன் வரும் புதிய மலிவு விலை சின்க் டேப்லெட்

By Karthikeyan
எக்கச்சக்க அப்ளிகேசன்களுடன் வரும் புதிய மலிவு விலை சின்க் டேப்லெட்

சின்க் க்ளோபல் ப்ரைவேட் லிமிடட் நிறுவனம் ஒரு புதிய மலிவு விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு ஸட்930 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த டேப்லெட் ரூ.5,499க்கு விற்கப்பட இருக்கிறது. மேலும் இந்த டேப்லெட்டில் எதிர்காலத்தில் ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அப்க்ரேட் செய்யலாம்.

இந்த டேப்லெட் மலிவு விலையில் வந்தாலும் பல சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக 512எம்பி ரேமைக் கொண்டு வரும் இந்த சின்க் டேப்லெட் 1.2 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரின் சக்தியைக் கொண்டிருப்பதால் இது விரைவாக இயங்கும் என்று நம்பலாம். அதோடு இந்த டேப்லெட் மிக உறுதியாக இருக்கும் என்றும் நம்பலாம்.

இந்த டேப்லெட் 7 இன்ச் அளவில் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டுள்ளது. மேலும் 0.3எம்பி முகப்பு கேமரா, 4ஜிபி சேமிப்பு மற்றும் சேமிப்பை 32ஜிபி வரை அதிகரிக்கக்கூடிய வசதி ஆகியவற்றை இந்த டேப்லெட்டில் பார்க்க முடியும். இணைப்பு வசதிக்காக இந்த டேப்லெட் 3ஜி, வைபை, யுஎஸ்பி, எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் ஆடியோ ஜாக் போன்ற இணைப்புகளைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த டேப்லெட் பல ஏராளமான அப்ளிகேசன்களுடன் வருகிறது. குறிப்பாக கூகுள் ப்ளே ஸ்டோர், கூகுள் மேப்ஸ், அடோப் ரீடர், ஜிடாக், வாட்ஸ்அப், ஸ்கைப், எம்எஸ்என், வேர்ட், எக்சல், பவர்பாயிண்ட், பிக் பிலிக்ஸ் சப்ஸ்க்ரிப்சன், பாலிவுட் ஹூங்கமா, இபிபோ கேம்ஸ், எச்டிஎம்எல் மற்றும் ஒபரா மினி பிரவுசர் போன்ற அப்ளிகேசன்கள் இந்த டேப்லெட்டில் உள்ளன.

அதுபோல் இந்த டேப்லெட் எல்லாவிதமான எம்பி3 மற்றும் எம்பி4 பார்மட்டுகளை சப்போர்ட் செய்யும். குறிப்பாக இந்த டேப்லெட் கார்பன் ஸ்மார்ட் டேப்2க்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X