ரூ.5,200ல் ஸின்க் களமிறக்கும் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!

Posted By: Karthikeyan
ரூ.5,200ல் ஸின்க் களமிறக்கும் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!

ஒரு காலத்தில் டேப்லெட்டுகள் சாதாரண மனிதர்களுக்கு அது வெறும் கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது சாதாரண மனிதர்களும் டேப்லெட்டுகளை வாங்கும் வகையில் குறைந்த விலையில் பல டேப்லெட்டுகள் அணிவகுத்து வருகின்றன. அந்த விதத்தில் இப்போது சின்க் டெக்னாலஜிஸ் இப்போது சின்க் பேட் ஸட்909 என்ற புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டைக் களமிறக்குகிறது.

இந்த சின்க் பேட் டேப்லெட்டின் சிறப்பு என்னவென்றால் இந்த டேப்லெட் 7 இன்ச் அளவில் ரெசிஸ்டிவ் டச் கொண்ட க்யுவிஜிஎ டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேயின் பிக்சல் ரிசலூசன் 800 x 400 ஆகும். அதுபோல் இதன் ஆஸ்பெக்ட் ரேசியோ 16 : 9 ஆகும். இந்த டேப்லெட் ஆட்டோ போக்கஸ் கொண்ட 640 x 480 பிக்சல்கள் கொண்ட முகப்பு விஜிஎ கேமராவைக் கொண்டுள்ளது.

இந்த சின்க் பேட் டேப்லெட்டின் விஐஎ ப்ராசஸர் 800 மெகா ஹெர்ட்ஸ் கொண்டிருக்கிறது. இதன் டிடிஆர்2 ரேம் 256 எம்பியைக் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டின் இன்டர்னல் மெமரி 4ஜிபி ஆகும். இதை எஸ்டி கார்டு மூலம் 16ஜிபி வரை அதிகரிக்க முடியும். மேலும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 2.2 ப்ரோயோ இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட்டில் 3.3 எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவை சப்போர்ட் செய்யும் மினி யுஎஸ்பி போர்ட் போன்ற வசதிகளும் உண்டு. மின் திறனிற்காக இந்த டேப்லெட் 3000 எம்எஎச் சக்தி கொண்ட லயன் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

இந்த சின்க் பேட் டேப்லெட்டின் எல்இடி பட்டனில் சின்க் டெக்னாலஜியின் முத்திரை உள்ளது. மேலும் இந்த டேப்லெட் பார்ப்பதற்கு ஸ்டைலாகவும் அதே நேரத்தில் இயக்குவதற்கு மிக எளிதாகவும் இருக்கிறது. இதன் இன்டர்னல் மெமரி 4ஜிபி மட்டுமே. இது ஒரு சிறிய குறையாகத் தெரிகிறது.

மேலும் இந்த டேப்லெட்டில் பாதுகாப்பு வசதி அதிகமாக உள்ளதால் இதை வைத்திருப்போரின் அனுமதி இல்லாமல் மற்றவர்கள் இதைப் பயன்படுத்த முடியாது. இந்த சின்க் பேட் டேப்லெட்டின் விலை ரூ.5200 ஆகும். மேலும் இது 1 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot